For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாப் முதல்வர் பதவி ஏற்பு விழா Live : பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்றார் பகவாந்த் மான்

Google Oneindia Tamil News

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பகவந்த் சிங் மன்னுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். பகவந்த் சிங் மன் மட்டும் தனியாக பதவி ஏற்க உள்ளார். இன்று அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. பஞ்சாப்பில் முதல்வரை தவிர்த்து 17 அமைச்சர்கள் வரை தேர்வு செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடக்கும் நிகழ்வில் 4 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடி அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு மஞ்சள் நிறத்தில் டர்பன் மற்றும் துப்பட்டா அணிந்து வரும்படி பகவந்த் சிங் மன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களை பிடித்து அங்கு ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 100 ஏக்கரில் இதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Punjab CM swearing in Live Updates: Bhagwant mann to take oath at at Khatkar Kalan

Newest First Oldest First
2:07 PM, 16 Mar

இன்குலாப் ஜிந்தாபாத் என தனது பதவியேற்பை முடித்தார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
1:36 PM, 16 Mar

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான். பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் காலனில் பதவியேற்பு விழா கோலாகலம். பகத் சிங்கை போல் மஞ்சள் நிற தலைப்பாகை அணியுமாறு பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மஞ்சள் தலைப்பாகை அணிந்திருந்தார். பஞ்சாப் மாநிலத்தில் 17 ஆவது முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான்
1:29 PM, 16 Mar

பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்பு
1:20 PM, 16 Mar

பஞ்சாப் மாநில முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு விழாவுக்கு அவரது முன்னாள் மனைவி வருகை. அமெரிக்காவில் உள்ள மானின் முன்னாள் மனைவி இந்தர் ப்ரீத் கவுர் பஞ்சாப் வருகை. பகவந்த் மானின் பிள்ளைகள் சீரத் கவுர் மன்னா (21), தில்ஷன் மன்னா (17) ஆகியோரும் வருகை
12:59 PM, 16 Mar

இன்று பஞ்சாப் வரலாற்றில் முக்கியமான நாள்- ஆம் ஆத்மி நிர்வாகி. 3 கோடி பஞ்சாப் மக்கள் முன்னிலையில் முதல்வராக பதவியேற்கிறார் பகவந்த் மான்- ஆம் ஆத்மி இணை ஒருங்கிணைப்பாளர். ஆம் ஆத்மி இணை ஒருங்கிணைப்பாளர் ராகவ் சாதா, பகவந்து மானுடன் சந்திப்பு. ஊழலை ஒழித்து அம்பேத்கரின் கனவை நனவாக்க உறுதியேற்போம்- ராகவ். ஷாஹித் இ அஸாமின் கனவையும் நனவாக்குவோம்- ராகவ்
12:56 PM, 16 Mar

பஞ்சாப்பில் 92 இடங்களை ஆம் ஆத்மி வென்றது ஆரம்பம்தான்- குருதாஸ் மான். ஆம் ஆத்மியின் சித்தாந்தம் சிறப்பானது- பஞ்சாபி பாடகர் குருதாஸ் மான். பஞ்சாபை வளமாக மாற்ற ஆம் ஆத்மிக்கு தைரியத்தை அந்த கடவுள் கொடுக்க வேண்டும்- குருதாஸ் மான்
12:56 PM, 16 Mar

மஞ்சள் நிறத்தில் தலைப்பாகை, துப்பட்டா அணிந்து கட்கர் காலனில் திரண்ட பஞ்சாப் மக்கள். இன்னும் சற்று நேரத்தில் பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்கிறார் பகவந்த் மான்
10:41 AM, 16 Mar

பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 லட்சம் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பு
9:59 AM, 16 Mar

பஞ்சாப்பை மகிழ்ச்சியான மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம்- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றது ஆம் ஆத்மி சார்பில் முதல்வராக பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார் பதவியேற்பு விழாவையொட்டி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ட்வீட் . இன்று பஞ்சாப்பிற்கு மிக சிறந்த நாள்- கெஜ்ரிவால் பஞ்சாப்பை மகிழ்ச்சியான மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம்- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நானும் கட்கர் காலன் கிராமத்திற்கு
9:34 AM, 16 Mar

பஞ்சாப் முதல்வராக பதவியேற்கும் பகவந்த் மானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. தமிழகமும் பஞ்சாப்பும் மாநில உரிமைகள் குறித்து நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்த வரலாறு உண்டு- ஸ்டாலின். புதிதாக பொறுப்பேற்கும் பஞ்சாப் அரசின் பதவிக்காலம் முழுமையாக வெற்றியடைய வாழ்த்துகள்- ஸ்டாலின்
9:08 AM, 16 Mar

பஞ்சாப் மாநிலம் நவான்ஷார் மாவட்டத்தில் உள்ள காட்கர் காலன் கிராமத்தில் பதவியேற்கிறார் மான். சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான காட்கர் காலனில் பதவியேற்பு விழா. ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறாது என பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் மான் அறிவிப்பு. தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே பகவந்த் மான் தனது பதவியேற்பு விழா இடத்தை தெரிவித்தார்
8:46 AM, 16 Mar

தூரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார் பகவந்த் மான். காங்கிரஸ் வேட்பாளர் தல்வீர் சிங்கை 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் மான். பஞ்சாப் முதல்வராக பதவியேற்கும் பகவந்த் மான் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். பகவந்த் மானின் ராஜினாமாவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றார்
8:23 AM, 16 Mar

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றியது. பஞ்சாப் மாநில முதல்வராக பகவந்த் மான் இன்று பொறுப்பேற்கிறார். ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களை மட்டுமே பெற்றது. 2017 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களுடன் ஆட்சி அமைத்தது
8:14 AM, 16 Mar

பஞ்சாப் முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் பகவந்த் மான். பகத் சிங்கின் மூதாதையர்கள் வாழ்ந்த காட்கர் காலன் கிராமத்தில் பதவியேற்கிறார் பகவந்த். விழாவுக்கு வருகை தரும் மக்கள் மஞ்சள் நிற தலைப்பாகையும் துப்பட்டாவும் அணிந்து வர பகவந்த் மான் வேண்டுகோள்
12:48 AM, 16 Mar

பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று பொறுப்பேற்பு
12:48 AM, 16 Mar

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த ஊரான கட்கார் காலன் கிராமத்தில் அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்

English summary
Punjab CM swearing in: Bhagwant mann to take oath at at Khatkar Kalan today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X