பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான சிறுமி வழக்கில் வெளியானது உண்மை! செயற்கை ஸ்வீட் காரணம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் 10 வயது சிறுமி பிறந்த நாள் கேக் சாப்பிட்டு உயிரிழந்த நிலையில், அந்த கேக்கில் அளவுக்கு அதிகமாகச் செயற்கை ஸ்வீட்னர் சேர்க்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நமது நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளன. இருப்பினும், சிலர் இதை முறையாகப் பின்பற்றுவது கிடையாது. இதனால் அரசின் நடவடிக்கைகளையும் தாண்டி சில நேரங்களில் தவிர்க்க முடியாத சம்பவங்கள் நடந்துவிடும்.

அப்படியொரு சம்பவம் தான் கடந்த மாதம் பஞ்சாபில் நடந்தது. பிறந்த நாளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்வீட்னர்: இதற்கிடையே இந்த மரணம் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது பஞ்சாபில் அந்த 10 வயது சிறுமி மரணத்திற்குக் காரணமான பிறந்த நாள் கேக்கில் அதிக செறிவு கொண்ட செயற்கை ஸ்வீட்னர் சேர்க்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 24ஆம் தேதி அந்த சிறுமியின் பிறந்தநாளுக்காக பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் இருந்து அவரது குடும்பத்தினர் பிறந்த நாள் கேக்கை ஆன்லைனில் ஆர்டர் செய்து இருந்தனர். அந்த சாக்லேட் கேக்கை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே சிறுமி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் நோய்வாய்ப்பட்டனர். அந்த சிறுமி கொஞ்ச நேரத்திலேயே உயிரிழந்தார். இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.
அதிகளவு இருப்பது உறுதி: அந்த கேக்கின் மாதிரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்கிடையே அந்த சோதனை முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் saccharine எனப்படும் செயற்கை ஸ்வீட்னர் அதிகம் பயன்படுத்தப்பட்டது உறுதியானது. இந்தத் தகவலை மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் ஜிண்டால் உறுதி செய்துள்ளார்.
பொதுவாக நாம் வெளியே வாங்கி சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் சிறிய அளவில் இந்த saccharine பயன்படுத்தப்படும். ஆனால், இதை நாம் மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இதன் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் கூட உடலில் இருக்கும் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு மிக வேகமாக உயரும் அபாயம் இருக்கிறது. இந்த பஞ்சாப் சிறுமி நிகழ்விலும் இதுதான் நடந்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை: இந்த செயற்கை ஸ்வீட்னர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட பேக்கரி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பேக்கரி உரிமையாளர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாளில் சோகம்: முன்னதாக அந்த சிறுமி தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. அந்த கேக்கை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கிய நிலையில், வாயில் வறட்சி உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அப்போது தான் அந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அந்த சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமியைக் காப்பாற்றத் தீவிர முயற்சி எடுக்கப்பட்டன. செயற்கை சுவாசமும் கூட தரப்பட்டது. இருப்பினும், அந்த சிறுமி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பேக்கரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் உட்பட.. 3 நாட்டு தலைவர்களுடன் பேசிய ஜெய்சங்கர்.. திடீரென நள்ளிரவில் பறந்த அழைப்பு! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்!












Click it and Unblock the Notifications