"லாரி டிரைவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு".. 15 ஆண்டுகளாக வீட்டிற்கு தெரியாமல் வாங்கியவருக்கு அடித்த ‘ஜாக்பாட்'

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: கடந்த 15 ஆண்டுகளாக வீட்டிற்கு தெரியாமல் லாட்டரி வாங்கி வந்த லாரி டிரைவருக்கு தீபாவளி பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

punjab-lorry-driver-wins-rs-12-crore-lottery-price-money-after-buys-tickets-over-15-years

பஞ்சாப் மாநிலம் மொகாலி அருகே உள்ள ஹம்யுன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பல்ஜிந்தர் சிங். லாரி டிரைவரான இவர் சிறிய நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டிற்கு தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கி வந்தார் பல்ஜிந்தர் சிங்

பல்ஜிந்தர் சிங் வீட்டை எடுத்து கொண்டால் லாட்டரி வாங்க எதிர்ப்பு உள்ளது. ''அதிர்ஷ்டம் எப்போதும் கைக்கொடுக்காது. இதனால் அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்'' என்பது தான் பல்ஜிந்தர் சிங் குடும்பத்தினரின் நிலைப்பாடு'. ஆனால் பல்ஜிந்தர் சிங்கோ, ''அதிர்ஷ்டம் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். என்றாவது ஒருநாள் பெரிய பரிசுத்தொகை தனக்கு கிடைக்கும்'' என நம்பிக்கையுடன் இருந்தார்.

அதோடு பண்டிகை கால லாட்டரி சீட்டுகளை பல்ஜிந்தர் சிங் கடந்த 15 ஆண்டுகளாக வாங்கி பரிசை எதிர்பார்த்தார். ஆனால் பரிசு விழுந்தது இல்லை. ஏமாற்றமே கிடைத்தது. ஆனாலும் பல்ஜிந்தர் சிங் மனம் தளரவில்லை. தீபாவளி பண்டிகையையொட்டி பல்ஜிந்தர் சிங் லாட்டரி வாங்கினார்.

தீபாவளியையொட்டி, மொகாலியின் ஜிராக்பூரில் உள்ள லாட்டரி கடையில் ரூ.500 கொடுத்து 'பஞ்சாப் மாநில டீயர் தீபாவளி பம்பர் லாட்டரி' வாங்கினார். நேற்று முன்தினம் குலுக்கல் நடந்தது.

இதில், பல்ஜிந்தர் சிங்கிற்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதனால் அவர் ஹேப்பியாகி உள்ளார். மேலும் லாட்டரி வாங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அவரது குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இதையடுத்து அவர் நேற்று லாட்டரி வாங்கிய கடைக்கு சென்று பரிசுத்தொகையை பெறுவதற்கான நடைமுறைகளை முடித்தார்.

இதுபற்றி பல்ஜிந்தர் சிங் கூறுகையில், ''நான் கடந்த 2010ம் ஆண்டு முதல் லாட்டரி வாங்கி வருகிறேன். பண்டிகை காலங்களில் மட்டுமே லாட்டரி வாங்கி யாருக்கும் தெரியாமல் வைத்து கொள்வேன். என்றாவது ஒருநாள் லாட்டரியில் பரிசு விழும் என்று நினைத்து இதை தொடர்ந்து செய்து வந்தேன்.

ஒவ்வொரு முறை லாட்டரி வாங்கும்போதும் பரிசு விழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்வேன். இப்போது எனக்கு ரூ.12 கோடி பரிசு தொகை விழுந்து விட்டது. எனக்கு பரிசுத்தொகையை தந்த கடவுளுக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

இந்த பரிசுத்தொகையை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்? என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர்,''என்னுடைய 2 குழந்தைகளின் படிப்புக்காக பணத்தை செலவு செய்ய உள்ளேன்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+