ஒட்டுமொத்த வளர்ச்சியில் நாட்டிலேயே 5வது இடத்தில் தமிழ்நாடு.. பஞ்சாப் முதலிடம்!
டெல்லி: நாட்டிலேயே ஒட்டுமொத்த வளர்ச்சியில் பஞ்சாப் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 5வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.
அதிகபட்ச தனி நபர் வருமானத்தில் மகாராஷ்டிராவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஆனால் வளர்ச்சி என்று பார்த்தால் அது பின்னுக்குப் போயுள்ளது. இந்த வரிசையில் மத்தியப் பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது.
ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைப் பொறுத்தவரை ஆந்திராதான் முதலிடத்தில் இருக்கிறது.
அதே சமயம், வீட்டு உபயோகப் பொருட்களை சொந்தமாக வாங்குவதில் பெண்களின் பங்கு என்ற வரிசையில் பார்த்தால், கேரளா முதலிடத்தில் இருக்கிறது.

நுகர்வோர் பொருட்களை வைத்து
மக்களின் வீடுகளில் உள்ள நுகர்வோர் பொருட்களின் அடிப்படையில், வசதிகள் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கிரைசில் ஆய்வு
இந்த ஆய்வை கிரைசில் நிறுவனம் நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. எங்க மாநிலம்தான் வளர்ச்சிக்கு உதாரணமாக இருக்கிறது என்று சில குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மாறி மாறிக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் அதற்கு நேர் மாறாக உள்ளது.

பஞ்சாப்தான் பெஸ்ட்
அத்தனை அடிப்படைப் பொருட்களையும் கொண்ட மக்களைக் கொண்ட மாநிலமாக வளர்ச்சியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது பஞ்சாப் மாநிலம். இங்கு 100 பேரில் 10 பேரிடம் கம்ப்யூட்டர் இருக்கிறது. அதேசமயம், சைக்கிள் கூட இல்லாதவர்களின் எண்ணிக்கை இங்கு மிக மிகக் குறைவு. அதாவது 4 சதவீதம்பேர்தான் உள்ளனர்.

விவசாயத்தில் பெஸ்ட்
பஞ்சாப் மாநிலம் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், அதில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பதுமே இதற்குக் காரணம் என்று கிரைசில் கூறுகிறது.

2வது இடத்தில் கேரளா
இந்த வரிசையில் கேரளா 2வது இடத்தில் உள்ளது. சுற்றுலாதான் இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

5வது இடத்தில் தமிழ்நாடு
இந்த வரிசையில் தமிழ்நாடு 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 3வது இடத்தில் ஹரியானா, 4வது இடத்தில் கர்நாடகம் ஆகியவை உள்ளன.

6வது இடம் குஜராத்
பொருளாதார வளர்ச்சியில் சிறப்பாக இருப்பதாக பாஜகவினரால் உதாரணம் காட்டப்படும் குஜராத் மாநிலம் இந்த வரிசையில் நம்மை விட பின்னுக்குத்தான் உள்ளது. அதாவது 6வது இடத்தில்தான் இருக்கிறது.

நல்ல வளர்ச்சி -பெண்களின் நிதி சுதந்திரத்தில் குஜராத் முதலிடம்
அதேசமயம், அபரிமிதமான வளர்ச்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை சொந்தமாக வாங்குவதில் பெண்களின் பங்கு இரண்டிலும் குஜராத்துக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளது கிரைசில். இந்தப் பட்டியலில் கேரளாவும், பஞ்சாபும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

வளர்ச்சியில் பின் தங்கிய சட்டிஸ்கர், பீகார், ஜார்க்கண்ட்
சட்டிஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளனவாம். இந்த மாநிலத்தில் பெரும்பாலானவர்களிடம் சொந்தமாக சொத்துக்கள் எதுவும் இல்லையாம்.

நகரங்களில் குர்கான் டாப்
நகரங்களைப் பொறுத்தவரை குர்கான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தலைநகரங்களில் சென்னை முதலிடம்
வளர்ச்சியான, செழுமையான தலைநகரங்கள் வரிசையில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அடுத்த இடத்தில் ஹைதராபாத்தும், பெங்களூரும் வருகின்றன.

பாட்னா ரொம்ப மோசம்
மோசமான வளர்ச்சியுடன் கூடிய தலைநகரங்கள் வரிசையில் பாட்னாவும், ராய்ப்பூரும் உள்ளன.

தென் மாநிலங்களில் கேரளாதான் பெஸ்ட்டாம்
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளாவைத் தவிர மற்ற மூன்று மாநிலங்களிலுமே சமச்சீரான வளர்ச்சி இல்லையாம்.

மத்தியப் பிரதேசம் மோசம்
பாஜகவினரால் உதாரணமாக காட்டப்படும் இன்னொரு மாநிலமான மத்தியப் பிரதேசம், வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளதாம்.

வருமானத்தில் மகாராஷ்டிரா முதலிடம்
தனி நபர் வருமானத்தில் மகாராஷ்டிராதான் முதலிடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications
