புரட்டாசி, வார விடுமுறை... திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. 20 மணி நேர காத்திருந்து தரிசனம்
திருப்பதி: புரட்டாசி மாதம் என்பதாலும் வார விடுமுறை என்பதாலும் திருப்பதியில் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு விஷேசமான மாதம் என்றால் அது புரட்டாசி ஆகும். மாதம் முழுவதும் 5 புரட்டாசிகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

இந்த மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதை புண்ணியமாகவே கருதுகின்றனர். நேற்று இரண்டாவது சனிக்கிழமை விசேஷம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் வார விடுமுறை, செவ்வாய்க்கிழமை காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை என்பதால் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு திருப்பதி நோக்கி படையெடுத்தனர். இதன் விளைவு 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பின.
நேற்று மட்டும் 1 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்டத்தை கருத்தில் கொண்டு விஐபி தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் ரத்து செய்தனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் உண்டியல் வசூல் ரூ. 2.46 கோடி ஆகும். கூட்ட நெரிசலால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications