சிபிஐ வைக்கிறீங்களா, வைங்க.. நான் ரெடி.. "தில்"லாகப் பேசும் ராதே மா...!
மும்பை: சிபிஐ விசாரணைக்கும் கூட நான் தயாராக இருக்கிறேன். நான் ஒரு தாய்.. என்னைத் தேடி வரும் பக்தர்கள் எனது பிள்ளைகள் போல. அவர்களிடம் நான் நடந்து கொள்வது, தாய்க்கும், பிள்ளைக்கும் இடையிலான உறவு போலத்தான். நான் சுத்தமானவள். என் மீது எந்தத் தவறும் இல்லை. என் மீது சிபிஐ விசாரணை வைத்தாலும் கூட நான் சந்திக்கத் தயார் என்று சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா கூறியுள்ளார்.
கடந்த வாரம் ராதே மா மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வரதட்சணை கொடுமைப் புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு ராதே மா மீது ஏகப்பட்ட .சரச்சைகள் வெடித்துள்ளன. அவர் ஆபாசமாக டான்ஸ் ஆடுகிறார், கவர்ச்சி உடை அணிகிறார். பக்தர்கள் இவரைத் தூக்குகிறார்கள், கட்டிப்பிடிக்கிறார்கள், முத்தமிடுகிறார்கள். இவரது கவர்ச்சிகரமான படங்களும் கூட வெளியாகிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் தான் மீதான வழக்கை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ராதே மா. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நான் சுத்தமானவள்
நான் சுத்தமானவள். தூய்மையானவள். அப்பழுக்கற்றவள். நான் ஒரு அப்பாவி. மீடியாவையும், போலீஸையும் நான் மதிக்கிறேன்.

பாசம் மட்டுமே.. ஆபாசம் இல்லாதவள்
நான் எனது பக்தர்களிடம் பாசம் வைத்துள்ளேன். ஆபாசம் இல்லாதவள் நான். எந்த ஆபாசத்தையும் நான் செய்ததில்லை.

தாய் மாதிரி
நான் ஒரு தாய். எனது பக்தர்கள் எனது பிள்ளைகள். அவர்களிடம் நான் தாய் போலத்தான் பழகுகிறேன். அவர்களும் எனது பிள்ளைகள் போலத்தான் பழகுகிறார்கள்.

மகன் முத்தம் கொடுத்தால் தப்பா
ஒரு தாய்க்கு மகன் முத்தம் கொடுத்தால் தவறாகுமா. அதுபோலத்தான் எனது பிள்ளைகளான பக்தர்களும் கட்டிப்பிடிக்கிறார்கள், முத்தமிடுகிறார்கள். இதைப் போய் ஏன் தவறாகப் பார்க்கிறார்கள்.

சிபிஐ விசாரணைக்கும் ரெடி
என் மீது சிபிஐ விசாரணை வைத்தாலும் நான் அதைச் சந்திக்கத் தயார். எந்தவிதமான விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் ராதே மா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications