குலுங்கியது இந்தியா, ஆப்கான், சீனா, நேபாளம்! உலகம் முழுவதும் 82 இடங்கள் அதிர்ந்தன!!
டெல்லி/காபூல்: இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளின் 82 இடங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பட்டகாலிலேயே படும் என்பதைப் போல நேபாளத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தை புரட்டியெடுத்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. 80 ஆண்டுகளுக்குப் பின்பு ஏற்பட்ட இப்பயங்கர நிலநடுக்கம் நேபாள நாட்டை உருக்குலைத்து போட்டுள்ளது.

இதன் தாக்கமாக இந்தியா, திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்தியாவில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்துக்கு பலியாகினர்.
இந்த சோக வடு இன்னமும் ஆறாத நிலையில் இன்றும் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகள் குலுங்கின. அதே நேரத்தில் இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலநடுக்க அளவு 7.5 ரிக்டராக பதிவாகி இருந்தது. சீனாவிலும் 7.4 ரிக்டராக நிலநடுக்கம் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது திபெத் பிராந்தியத்தில் சீனா-நேபாள எல்லையில் நேபாள பகுதிக்குள் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications