ஜாட் போராட்டத்தால் டெல்லிக்கு வர வேண்டிய தண்ணீர் தடைபடக் கூடாது: ஹரியானாவுக்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி: ஜாட் போராட்டத்தால் டெல்லியின் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படக் கூடாது. டெல்லிக்கு வர வேண்டிய தண்ணீர் தடையில்லாமல் வந்து சேருவதை ஹரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஹரியானாவில் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் ஜாட் சமூகத்தினர் முனாக் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் கால்வாயின் மதகுகளை அடைத்து தண்ணீர் வெளியேறாதபடி செய்துள்ளனர்.

இதுதான் டெல்லிக்கு வரும் தண்ணீர்ப் பாதை ஆகும். இது தற்போது தடைபட்டுள்ளதால் டெல்லியில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசை தலையிட்டு தீர்வு காணக் கோரி டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
ஜாட் போராட்டத்தால் டெல்லிக்கு கிடைக்க வேண்டிய நீர் பாதிப்பின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஹரியானா அரசிடம் கூறியுள்ளது. கால்வாயின் அனைத்து மதகுகளையும் இன்று திறந்துவிட்டால் கூட நீர் டெல்லியை அடைய 24 மணிநேரம் ஆகும்.
நீர் பற்றாக்குறையால் டெல்லியில் உள்ள 7 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் வீடு, டெல்லியில் உள்ள ராணுவ தளங்கள், மருத்துவமனைகள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் தவிர பிற பகுதிகளில் நீர் வினியோகம் பாதிக்கப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications