என் வயசையும் சேர்த்து உங்களுக்கு தந்திடறேன்.. லாலுவுக்கு ரோஸ் கொடுத்த ராப்ரி!
லாலு பிரசாத் பிறந்த நாளுக்கு ராப்ரி தேவி வாழ்த்து சொல்லி உள்ளார்.
பீகார்: "என் வயசையும் சேர்த்து உங்களுக்கு தந்திடறேன்.. நீங்கள் நீண்ட காலம் வாழணும்" என்று லல்லு பிரசாத்தை வாழ்த்தி உள்ளார் மனைவி ராப்ரி தேவி!
லல்லு பிரசாத் - ராப்ரி தேவி = இவர்கள் இருவருமே ஆதர்ச தம்பதி. ஒருவருக்கொருவர் நிறைய அன்பினை தாங்கி நிற்பவர்கள். 9 குழந்தைகளை பெற்றாலும், மானசீகமான பாசத்தை பொழிந்து வருபவர்கள்.
பீகாரின் முதலமைச்சர், மத்திய அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த லல்லு.. பெரிசா ஒன்றும் படிக்காதவர். எல்லாமே இவருக்கு பிராக்டிக்கல் தியரிதான்.. வாழ்க்கை தந்த அனுபவ பாடமே, இவரது ஆட்சி, நிர்வாகத்துக்கு உதவியாக இருந்தது.

சிந்தனை
கடுமையான உழைப்பு என்று ஒத்தை வார்த்தை சொல்லிவிட முடியாது.. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய சிந்தனைதான், ரயில்வேயின் அதிகார மையங்களை துளைத்தெடுத்து சென்றது.. நிறைய சீரிய மாற்றத்தை தந்தது.

இல்லத்தரசி
இதேதான் ராப்ரி தேவியும். மூன்று முறை மாநில முதல்வர் என்றாலும், ஒரு பக்கா இல்லத்தரசி என்ற முத்திரையை எப்போதும் பதித்து கொண்டே இருந்தவர். ஒரு ஹவுஸ் வைஃப் எப்படி முதல்வராக பொறுப்பேற்க முடியும், பதவியை வகிக்க முடியும் என்ற ஆச்சரியங்களை உடைத்தெறிந்தவர்.

பிறந்த நாள்
இப்போது விஷயம் என்னவென்றால், லாலுவுக்கு ஹேப்பி பர்த்டே! எத்தனையோ வழக்கு, விசாரணை, ஜெயில், அங்கு உடல்நலம் பாதிப்பு என்று இவரது வாழ்க்கையே புரட்டி போட்டுவிட்டது. ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

வைரல் ட்வீட்
நிம்மதியற்ற வாழ்வு இருந்தாலும், இவரது 72-வது பிறந்த நாளை குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அதிலும் ராப்ரி தேவி ஒரு ட்வீட் போட்டுள்ளார். லாலுவுக்கு ரோஜாப்பூ தருவது போல ஒரு போட்டோவும் பதிவிட்டுள்ளார். "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. என் வயசையும் சேர்த்து உங்களுக்கு தருகிறேன்.. நீடூழி வாழ வேண்டும்" என்று கணவனுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார். ராப்ரியும்-லாலுவும் ஜோடியாக ரோஜாப்பூவுடன் உள்ள இந்த போட்டோ படு வைரலாகி வருகிறது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications