தெலுங்கானா மாநில முதல்வர் யார்? ஜெய்பால் ரெட்டிக்கு வாய்ப்பு?
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதே நேரத்தில் தெலுங்கானாவிலோ யார் புதிய மாநில முதல்வர் என்ற விறுவிறு விவாதம் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதற்கான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படக் கூடும். இதனால் தெலுங்கானா உருவாவது தவிர்க்க முடியாதது.

ஜெய்பால் ரெட்டி?
அப்படி உருவாகும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் யார் என்ற விறுவிறுப்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

யார் யார் போட்டி?
அதேபோல் மாநில அமைச்சர்கள் ஜனா ரெட்டி, உத்தம்குமார் ரெட்டி, அருணா ஆகியோரது பெயரும் அடிபடுகிறது. துணை முதல்வரான தாமோதர் ராஜநரசிம்மாவின் பெயரும் அடிபடுகிறது.
அத்துடன் மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாச, அமைச்சர் பொன்னால லக்ஸ்மையா பெயரும் அடிபடுகிறது.

48 எம்.எல்.ஏக்கள்தான்..
மொத்தம் 119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 48 எம்.எல்.ஏக்களே உள்ளனர்.

டி.ஆர்.எஸ். ஆதரவு அவசியம்
இதனால் 17 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் 7 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மஜ்லீஸ் கட்சியின் ஆதரவுடனேயே காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications