லண்டன் சூதாட்ட கிளப்பில் டான்ஸ் ஆடிய ராதே மா: பரபரப்பு வீடியோ
மும்பை: சர்ச்சை சாமியார் ராதே மா லண்டனில் உள்ள சூதாட்ட கிளப்பில் நடனம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை வழக்கு, பாலியல் தொல்லை, நிர்வாண பார்ட்டி என்று அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பெண் சாமியார் ராதே மா. வரதட்சணை கொடுமை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தான் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீன் வழங்கியபோதிலும் அவர் எப்பொழுது போலீசார் விசாரணைக்கு அழைத்தாலும் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் அவர் மற்றும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராதே மா சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சூதாட்ட கிளப் ஒன்றில் நடனமாடியபோது எடுத்த வீடியோ செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கிடைத்துள்ளது.
முன்னதாக ராதே மா சிவப்பு நிற மினிஸ்கர்ட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர் கூறுகையில்,
பக்தர்கள் ஆசைப்பட்டார்கள் அதனால் தான் மேற்கத்திய உடை அணிந்தேன். அவர்களே விரும்பி எனக்கு அவ்வளவு மேக்கப் போட்டுவிட்டனர். பக்தர்களின் ஆசைக்காக தான் நான் அப்படி உடை அணிந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications