சீடருடன் உறவு கொள்ள வற்புறுத்தினார் ராதே மா... டிவி நடிகை டோலி பிந்த்ரா புகார்
மும்பை: ராதா மா தனது சீடர் ஒருவருடன் தன்னை உறவு வைத்து கொள்ள கூறியதாக டிவி நடிகை டோலி பிந்த்ரா பரபரப்பு புகார் கூறி உள்ளார். ராதே மா மூலம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மும்பை பெண் சாமியார் ராதே மா கடந்த 15 நாட்களாக ஊடகங்களில் அடிபட்டு வருகிறார். 46 வயதான இவர் 10 வகுப்பு மட்டுமே படித்துள்ளார்.தனது 18 வயதில் மோகன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராம்தீன் தாஸ் என்ற சாமியாரை சந்தித்த பின்னர் தன்னுடைய கணவரை பிரிந்து சாமியாராக வலம் வரத்தொடங்கினார்.

ஜிகு ஜிகு ஆடைகள்
பெயருக்குத்தான் சாமியார் ஆனால் ஜிகு ஜிகு மேக் அப்... லிப்ஸ்டிக்... விலை உயர்ந்த ஆடைகள் என ஒரு நடிகையைப் போல பெண் சாமியார் ராதே மா வலம் வருகிறார். சாமியார் ராதே மாவின் ஆட்சேபகரமான படங்கள் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பக்தர்களுக்கு ஆசி
ராதே மா தனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமான படங்களும் வெளியாகின. இவர் குட்டை பாவாடை அணிந்து பாலிவுட் திரைப்பட இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் வீடியோ
ஒரு பக்தர் ராதே மாவை அப்படியே அலேக்காக தூக்கிச் சுற்றி பெருமிதம் அடைகிறார். அந்த வீடியோவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிவி நடிகை புகார்
ராதே மாவுக்கு எதிராக பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சர்ச்சை முடிவதற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சி டோலி பிந்த்ரா தற்போது ஒரு குற்ற சாட்டை எழுப்பி உள்ளார்.

கொலை மிரட்டல்
ராதா மா தனது சீடர் ஒருவருடன் தன்னை உறவு வைத்து கொள்ள கூறியதாக கூறி உள்ளார். மேலும் அவர் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாகவும் கூறி உள்ளார். இது குறித்து டோலி பிந்த்ரா மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

20 பெயர்கள்
ராதே மாவின் சீடர்கள் என்னை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயன்றனர். ஒரு முறை அவரது மகன் மற்றும் அவரது சீடர் ஒருவரும் மற்ற சீடர்கள் முன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர் என்று 20 பெயர்களை பெயர்களை குறிப்பிட்டு உள்ளார் டோலி பிந்த்ரா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications