சும்மாவே பிக் பாஸுன்னா சர்ச்சையா கிடக்கும், இதுல ராதே மா வேறயா?
மும்பை: சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 10 ரியாலிட்டி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா கலந்துகொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பஸ் ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். அந்த ஷோவின் 10வது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது. பிக் பாஸ் என்றால் சர்ச்சை, கசமுசா இல்லாமலா கண்டிப்பாக உண்டு என்று சொல்லும் அளவுக்கு இருக்கும் நிகழ்ச்சி.
இந்நிலையில் இந்த சீசனில் பிரபல பெண் சாமியார் ராதே மா கலந்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

ராதே மா
மினி ஸ்கர்ட் அதாங்க குட்டைப் பாவாடை அணிந்து ராதே மா போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ராதே மாவை தான் பிக் பாஸுக்கு அழைத்துள்ளார்களாம்.

பாலியல் புகார்
பிக் பஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை டாலி பிந்த்ரா ராதே மா மீது பாலியல் புகாரே தெரிவித்தார். ராதே மா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டும்
ராதே மா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று கடந்த ஆண்டும் கூறப்பட்டது. இதை ராதே மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மறுத்தார். இதற்கிடையே ராதே மாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் ராஜ் சிங்
பாலிகா வது தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரதியுஷா பானர்ஜி தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரதியுஷாவின் காதலர் ராகுல் ராஜ் சிங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications