ரேயனை மணக்கப் போகிறேன்.. ஆசிர்வதியுங்கள்..: அபிமன்யூ மிதுன்
பெங்களூர்: ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் ராதிகா சரத்குமாரை மணக்கப் போகிறேன். அனைவரும் ஆசிர்வதியுங்கள் என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான். இவருக்கும், கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது.
|
என் மகளுக்குத் திருமணம்...
தனது மகள் திருமணம் குறித்து நடிகை ராதிகா டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். எனது குழந்தையின் மகத்தான தருணம் இது. அனைவரும் ஆசிர்வதியுங்கள் என்று அதில் ராதிகா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
|
நன்றி.. நன்றி... நன்றி..
இது தொடர்பாக ரேயானும் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், அனைவரது வாழ்த்துக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆசிர்வதியுங்கள்...
அதேபோல அபிமன்யூ மிதுனும் தனது பேஸ்புக் பக்கத்தில் ரேயானுடன் இருக்கும் அழகிய கருப்பு வெள்ளைப் படத்தை வெளியிட்டுள்ளார். கூடவே, ‘எங்களது குடும்பத்தினரின் ஆசிகளுடன் எங்களது திருமணம் நடைபெறவுள்ளது. அனைவரும் ஆசிர்வதியுங்கள்' என்று தெரிவித்துள்ளார் மிதுன்.

ஐபிஎல் வீரர்...
மிதுன் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி வருபவர் ஆவார். இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் ஆடியுள்ளார்.

படத் தயாரிப்பில் ரேயான்...
ரேயான் தனது தாயார் ராதிகாவுடன் இணைந்து படத் தயாரிப்புப் பணிகளைப் பார்த்துக் கொள்கிறார். ரேடான் டிவி தயாரிப்புகளிலும் அவர் பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மகன் - ஒரு மகள்...
ராதிகாவுக்கு ரேயான் மூத்த மகள் ஆவார். இது போக சரத்குமார் மூலமாக ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேயான் திருமணத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமாரின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications