2 லட்சம் வாக்குகள் லீடு.. பஞ்சாப்பில் ஜெயிலில் இருந்தே கெத்து காட்டிய அம்ரித் பால் சிங்.. யார் இவர்?
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், சிறையில் இருந்தபடியே 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் அம்ரித் பால் சிங்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த 1 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் மல்லுக்கட்டின. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் இங்கே தனித்தனியே களம் கண்டுள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் அங்கு கடும் போட்டியும் நிலவுகிறது.
அதே போல சுமார் 28 வருடங்களாக ஒன்றாக போட்டியிட்ட சிரோமணி அகாலி தளமும் (எஸ்ஏடி) பாஜகவும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. அதேபோல உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் பகுஜன் சமாஜ் கட்சியும் இங்கு தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சிகள் தவிர, காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் உள்ளிட்டோர் சுயேச்சையாகவும் களமிறங்கியுள்ளனர்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மற்றும் சிம்ரஞ்சித் மான் கட்சிகளுக்கு பஞ்சாபில் சில தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இதனால், பஞ்சாப் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி அதிக இடங்களை பெறும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் ஆம் ஆத்மி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
அம்ரித் பால் சிங்: கதூர் ஷாகிப் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட அம்ரித் பால் சிங் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைதான அமிரித் பால் சிங் தற்போது திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக குல்பிர் சிங் ஜிரா, ஆம் ஆத்மி கட்சியில் லால்ஜித் சிங் புல்லார், பாஜகவில் மன் ஜித் சிங் மன்னா மியான்விண்ட் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் அம்ரித் பால் சிங் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங்கை விட ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் அம்ரித் பால் சிங் முன்னிலை பெற்றுள்ளார்.
மதியம் 12.45 மணி நிலவரப்படி
சுயேச்சை வேட்பாளர் அமிரித் பால் சிங் - 2,45,060
காங்கிரஸ் குல்பிர் சிங் ஜிரா - 1,42,177
ஆம் ஆத்மி லால்ஜித் சிங் புல்லார் - 1,25,546.
வாக்கு எண்ணிக்கை முடிவில்
சுயேச்சை வேட்பாளர் அமிரித் பால் சிங் - 4,04,430
காங்கிரஸ் குல்பிர் சிங் ஜிரா - 2,07,310
ஆம் ஆத்மி லால்ஜித் சிங் புல்லார் - 1,94,836.
யார் இவர்: மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட அமைப்பு 'வாரிஸ் பஞ்சாப் டி'. இந்த அமைப்பை தற்போது அம்ரித் பால் சிங் தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது அடாவடி மற்றும் வன்முறை நடவடிக்கைகள் அங்கு பஞ்சாப் மாநில போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி ஒருவர், அமிர்தசரசில் உள்ள காவல் நிலையத்தில் போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தார்.
காவல் நிலையம் முற்றுகை: அவரை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போருக்கு போவது போல சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் காவல்துறை உயர் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதனால், நிலமையை சமாளிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை போலீஸ் விடுவித்தது. இந்த விவகாரம் பஞ்சாப் மாநில காவல்துறைக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
Punjab Lok Sabha Election Results LIVE: மொத்தமாக அள்ளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி.. பாஜகவுக்கு பெரிய அடி
மார்ச் மாதம் சரணடைந்தார்: இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையில் பஞ்சாப் காவல்துறை தீவிரம் காட்டியது. ஆனால், போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் தலைமறைவு ஆனார். ஒரு மாதத்திற்கும் மேலாக அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் தேடி வந்தது. ஆனால், அவரை கைது செய்ய முடியவில்லை.
அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ், அசாம் போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படை இணைந்து தேடி வந்தது. இதற்கிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீசில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து போலீசாரால் அம்ரித் பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications