Punjab Lok Sabha Election Results LIVE: பாஜகவுக்கு ஜீரோ.. 7+3.. மொத்தமாக அள்ளிய காங்கிரஸ், ஆம் ஆத்மி
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளில் தனித்தனியாக களம் கண்டுள்ள காங்கிரஸ் 7 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களிலும் என வெற்றி பெற்றுள்ளது. பாஜக பஞ்சாப்பில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த 1 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியாக உள்ள ஆத்மி, காங்கிரஸ், பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் மல்லுக்கட்டின.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் இங்கே தனித்தனியே களம் கண்டுள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் அங்கு கடும் போட்டியும் நிலவுகிறது. அதே போல சுமார் 28 வருடங்களாக ஒன்றாக போட்டியிட்ட சிரோமணி அகாலி தளமும் (எஸ்ஏடி) பாஜகவும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன.
அதேபோல உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் பகுஜன் சமாஜ் கட்சியும் இங்கு தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சிகள் தவிர, காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் உள்ளிட்டோர் சுயேச்சையாகவும் களமிறங்கியுள்ளனர். உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மற்றும் சிம்ரஞ்சித் மான் கட்சிகளுக்கு பஞ்சாபில் சில தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது.
இதனால், பஞ்சாப் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சி அதிக இடங்களை பெறும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் ஆம் ஆத்மி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்றது. இதேபோல் ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. சிரோமணி அகாலி தளமும் (எஸ்ஏடி) ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
* காங்கிரஸ் - 7 இடங்கள்
* ஆம் ஆத்மி - 3 இடங்கள்
* சிரோமணி அகாலி தளம் - 1 இடம்
* சுயேட்சை வேட்பாளர்கள் - 2 இடங்கள்
சதூர் ஷாகிப் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட அம்ரித் பால் சிங் சுயேட்சையாக போட்டியிட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான அமிரித் பால் சிங் தற்போது திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக குல்பிர் சிங் ஜிரா, ஆம் ஆத்மி கட்சியில் லால்ஜித் சிங் புல்லார், பாஜகவில் மன் ஜித் சிங் மன்னா மியான்விண்ட் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் அம்ரித் பால் சிங் வெற்றி பெற்றுள்ளார். 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் குல்பீர் சிங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
பாட்டியாலா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரனீத் கவுர் பின்னடவை சந்தித்துள்ளார். இவர் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஹோஷிர்பூர், அனந்தபுர் ஷாகிப், சங்க்ருர் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஷிரோமணி அகாலி தளம் கட்சி ஒரு இடத்திலும் சுயேட்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி குருதாஸ்பூர், அமிர்தசரஸ், ஜலந்தர், லுதியானா, பாட்டியாலா, ஃபேட்கார் சாகிப், பிரோஸ்புர் ஆகிய 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications