தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை விரைவில் அறிவிக்கிறார் ராகுல் !
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பதை வரும் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் கட்சி மேலிட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

இதையடுத்து யாரை தமிழக தலைவராக அறிவிப்பது என்பதில் காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் உள்ளது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று உயிர்ப்போடு வைத்திருக்கும் தலைவரை கட்சி மேலிடம் தேடி வருகிறது.
தலைவர் பதவி போட்டியில், தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து சமீபத்தில் மீண்டும் காங்கிரசுக்கு வந்த, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், எச்.வசந்தகுமார், மாணிக்தாகூர், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.
இதில், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சோனியாவுக்கு நெருக்கமான சிலர் தகவல் தந்துள்ளனர்.
இவற்றில், கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாவும், புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே காராத்தே தியாகராஜன் நேற்று ராகுல் காந்தியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications