முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாளின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு: ராகுல் காந்தி
பெங்களூர்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பொன்னம்மாளின் மறைவுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
நிலக்கோட்டை முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பொன்னம்மாளின் மறைவுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவரும், பொன்னம்மாளின் பேத்தியுமான ஜான்சி ராணிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் தனது இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
உங்களது பாட்டி ஏ.எஸ். பொன்னம்மாள் மரணம் அடைந்ததை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அதற்காக எனது ஆழ்ந்த இரங்கலையும், மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவின் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒரு மூத்த தலைவரை இழந்துவிட்டது. அவர் கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் நீண்ட நாட்களாக சிறப்புடன் பணியாற்றினார். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும், பெண்கள் உரிமைகளுக்கும் இடைவிடாது சேவை புரிந்தார்.
அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பேரிழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும், உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்காகவும் இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications