காங்கிரஸின் உயர்மட்டக்குழுவுக்கு மொத்தமாக புதிய உறுப்பினர்கள்.. ராகுல் காந்தி அதிரடி
காங்கிரஸின் உயர்மட்டக்குழு மொத்தமாக கலைக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸின் உயர்மட்டக்குழு மொத்தமாக கலைக்கப்பட்டு இருக்கிறது. ராகுல் இதற்கான புதிய உறுப்பினர்களை விரைவில் தேர்வு இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகி ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட பின் புதிய மிக முக்கியமான அறிவிப்பை முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தற்போது செயல்பட்டு வரும் உயர்மட்ட குழுவை மொத்தமாக களைத்து இருக்கிறார்.

முன்பு அந்த குழுவில் மன்மோகன் சிங், பா, சிதம்பரம், குலாம் நபி அசாத் ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் புதிய குழுவில் காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்களும் இடம்பெற இருக்கிறார்கள்.
அதேபோல் சோனியா காந்தி இந்த குழுவில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும் ராகுல் காந்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications