ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமே மகாத்மா காந்தியை படுகொலை செய்தது: குஜராத்தில் ராகுல் பேச்சு

குஜராத் மாநிலம் பர்தோலியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரலாறு தெரியாமல் குஜராத்தில் ஆட்சி நடத்துகிறார். அவர் வரலாற்றை சரியாக படிக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் நரேந்திர மோடி. ஆனால் அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நச்சுத்தன்மை கொண்டது எனக் கூறியவர் சர்தார் வல்லபாய் படேல்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தம்தான் மகாத்மா காந்தி கொலைக்கு காரணம். காந்தி மறைவுக்கு பின்னர் ஆர்.எஸ். எஸ்., இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று பட்டேல் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட பட்டேலுக்கு சிலை அமைக்கிறார் நரேந்திர மோடி.
குஜராத்தில் சிறைக்கு சென்றவர்களே அமைச்சர்களாக உள்ளனர். இந்த மாநிலத்தில் 13,000 அரசு பள்ளிகளும், 55, 000 சிறு தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன.
குஜராத்தில் 6000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் ஆணையர்கள் உள்ளனர். ஆனால் குஜராத்தில் ஒருவர் தான் இருக்கிறார்.
குஜராத்தில் 9 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. குஜராத் அரசு பணக்காரர்களால் நடத்தப்படுகிறது. குஜராத்தில் ஏழைகளின் ஆட்சி வர வேண்டும் என்றே விரும்புகிறேன்;
ஒரு தனிப்பட்ட மனிதரால் அல்ல.. டீ விற்பவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும் ஆனால் நாட்டை ஏமாற்றுபவர்களை எப்படி மதிக்க முடியும்?
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications