2019 லோக்சபா தேர்தல் ஒரு குருஷேத்திரப் போர்... நாங்கள் பாண்டவர்கள்- ராகுல்காந்தி
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தை கைப்பற்ற போராடும் கௌரவர்களை போல ஆனால், காங்கிரஸ் பாண்டவர்களை போல உண்மைக்காக போராடும் என்று கூறியுள்ளார் ராகுல்காந்தி.
டெல்லி: 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை குருஷேத்திரப்போருடன் ஒப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி. பாஜகவினரை கௌரவர்களாவும், காங்கிரஸ் கட்சியினரை பாண்டவர்களாவும் சித்தரித்து பேசி தொண்டர்களை இப்போதே தேர்தலுக்கு தயார்படுத்தியுள்ளார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், குருஷேத்திர களத்தில் பேர் நடந்தது. கொளரவர்கள் அதிக சக்தியுடன், அதிகாரத்துக்காக போரிடுபவர்களாக இருந்தனர். பாண்டவர்கள் அமைதியாக உண்மைக்காக போராடுபவர்களாக இருந்தனர். அதேபோன்று தற்போது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தை கைப்பற்ற போராடும் கௌரவர்களை போல ஆனால், காங்கிரஸ் பாண்டவர்களை போல உண்மைக்காக போராடும்'
காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் மாநாடு என்பதால் தொண்டர்கள் எதிர்பார்ப்புடனேயே டெல்லிக்கு சென்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை. ஆளும் பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மக்கள் கைவிட்டனர்
பா.ஜ.க. ஒரு அமைப்பின் குரல். காங்கிரஸ் ஒட்டுமொத்த நாட்டின் குரல். கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால் மக்கள் எங்களை கைவிட்டனர். இதை நான் மகிழ்ச்சியாக சொல்லவில்லை. காங்கிரஸ் உண்மையை வெளிக்கொண்டு வரும்.

மோடி மாயா
மோடி ஒவ்வொரு முறையும் பிரச்னைகளை திசை திருப்புகிறார். 2014ஆம் லோக்சபா தேர்தலின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.15 லட்சம் தரப்படும் என வாக்குறுதி அளித்தது பாஜக. ஆனால் அவர்கள் கூறிய நல்ல நாளும் இன்னும் வரவில்லை, ரூ.15 லட்சமும் தரவில்லை. அச்சே தின் என்றார்..சுவச் பாரத் என்றார் எல்லாம் மோடி மாயா.

நசுக்கும் பாஜக
பாஜகவினர் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களிடம், இது உங்கள் இடம் இல்லை என்பார்கள். தமிழர்களிடம் அழகான உங்களின் மொழியை மாற்றுங்கள் என்பார்கள். வடகிழக்கு மாநில மக்களிடம், உங்களின் உணவுப் பழக்கம் பிடிக்கவில்லை என்பார்கள். பெண்களின் ஆடை விஷயங்களிலும் பாஜக கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

முதலாளித்துவத்தின் உருவம்
முதலாளித்துவத்தின் மொத்த உருவமாக மோடி இருக்கிறார். நேர்மையாக தொழில் செய்பவர்களை செய்யவிடாமல், ஊழல் அதிகாரிகளைக் கொண்டு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்வார்கள். காங்கிரஸுக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் வேறுபாடு உண்டு. காங்கிரஸ் தேசிய நிறுவனங்களை ஆதரிக்கும், மதிக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ், தாங்கள் மட்டும் தான் ஒரே நிறுவனம் என செயல்படும்.

சுவர் உடைக்கப்படும்
காங்கிரஸிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். இங்கு தலைவர்களுக்கும் கட்சி பணி செய்பவர்களுக்கும் இடையே ஒரு சுவர் உள்ளது. எனது முதல் பணி அந்த சுவற்றை உடைப்பது தான். சீனியர் தலைவர்களின் ஆலோசனைப்படி அன்பு கொண்டு அந்த சுவர் உடைக்கப்படும். காங்கிரஸ் கட்சி நாட்டை முன்நோக்கி எடுத்துச் செல்லும். ஆனாலும் நாம், மனிதர்கள். தவறுகள் நடக்கும்.

குருஷேத்திர போர்
மோடி தன்னை கடவுளின் அவதாரமாக நினைத்துக்கொள்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், குருஷேத்திர களத்தில் பேர் நடந்தது. கொளரவர்கள் அதிக சக்தியுடன், அதிகாரத்துக்காக போரிடுபவர்களாக இருந்தனர். பாண்டவர்கள் அமைதியாக உண்மைக்காக போராடுபவர்களாக இருந்தனர். அதேபோன்று தற்போது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தை கைப்பற்ற போராடும் கௌரவர்களை போல ஆனால், காங்கிரஸ் பாண்டவர்களை போல உண்மைக்காக போராடும் என்று பேசினார் ராகுல்காந்தி.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications