வாசன் போல.... எங்கெல்லாம் குழம்புது காங்கிரஸ் குட்டை.. ஆராய்ச்சி செய்யும் ராகுல் காந்தி!
டெல்லி: ஜி.கே.வாசனின் அதிரடி முடிவால் காங்கிரஸ் மேலிடம் சற்றே சுறுசுறுப்பாகியுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தைப் போல வேறு எந்த மாநிலத்தில் எல்லாம் கட்சியில் பிரச்சினை உள்ளது என்றஆய்வில் துணைத்தலைவர் ராகுல் காந்தி இறங்கியுள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது எந்தெந்த மாநிலங்களில் பிரச்சினை உள்ளது என்பது குறித்து அவர் கேட்டுள்ளார்.

தொடர் தோல்விகள்
லோக்சபா தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் பல மாநிலங்களில் காங்கிரஸ் கலகலத்துப் போயுள்ளது. தோல்விகளும் தொடர் கதையாகியுள்ளன.

முக்கியத் தோல்விகள்
மகாராஷ்டிரா, ஹரியானாவில் மிகப் பெரிய அடியை காங்கிரஸ் வாங்கியுள்ளது. இது காங்கிரஸ் மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

கோஷ்டிப் பூசல் வேறு
இது போதாதென்று பல மாநிலங்களில் கோஷ்டிப் பூசல்கள் விஸ்வரூபம் எடுக்கஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில் உடைந்து போன காங்கிரஸ்
தமிழகத்தில் காங்கிரஸ் பெரும் பிளவை சந்தித்துள்ளது. தனது ஆதரவாளர்களோடு ஜி.கே.வாசன் வெளியேறி விட்டார்.

"தாத்தா"க்களுடன் ஆலோசனை
இதையடுத்து மூத்த தலைவர்களான மீரா குமார், அகமது படேல், சி.பி.ஜோஷி, மனீஷ் திவாரி உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் இதில் கலந்து கொண்டார்.

என்ன செய்யலாம்
எந்தெந்த மாநிலங்களில் சிக்கல் அதிகமாக உள்ளது. அதை எப்படி சமாளிக்கலாம், தொய்ந்து போயுள்ள கட்சியை எப்படி தூக்கி நிறுத்தலாம், பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினாராம்.

ராகுல் காந்தி எதையாவது செய்யப் போய்
ஏற்கனவே ராகுல் காந்தி மீது காங்கிரஸாருக்கே அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அவர் எடுக்கும் முடிவுகள் தோல்வியில்தான் போய் முடிகின்றன. இந்த நிலையில் தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறேன் என்ற பெயரில் ராகுல் காந்தி எதையாவது செய்யப் போய் அது இன்னும் ஏடாகூடமான நிலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சமும் காங்கிரஸாரில் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவுகிறதாம்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications