'ஒன் ரேங் ஒன் பென்ஷன்' திட்டத்தில் ராகுல் நாடகமாடுகிறார்: முக்தார் அப்பாஸ் நக்வி தாக்கு
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் குறித்து பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்த ராகுல்காந்தி முயன்றுள்ளார் என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
டெல்லி: ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை வைத்து ராகுல் காந்தி அரசியல் நாடகமாடுவதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த ராணுவ வீரரின் சடலத்தை பார்க்கச் சென்ற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திரை சந்தித்ததன் மூலம் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் குறித்து பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்த ராகுல்காந்தி முயன்றுள்ளார்.
இதெல்லாம் பகுதி நேர அரசியல்வாதிகள் போடும் முழுநேர அரசியல் நாடகம். இந்த அரசியல் நாடகம் நிறுத்தப்பட வேண்டும். முதலில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் சிமி பயங்கரவாதிகள் குறித்த கேள்வி உருவாக்கப்பட்டது. இப்போது ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் குறித்து குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
40 ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர்கள் இந்த திட்டம் குறித்து இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் தான் இந்த காலதாமதத்துக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதால் அதை தவிர்க்க இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். இவ்வாறு நக்வி கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications