நாடே கலவரத்தில் பற்றி எரியும்போது, நார்வே புறப்பட்ட ராகுல் காந்தி!
ஹரியானா, பஞ்சாப், டெல்லி என கலவர பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிந்து வரும் நிலையில் நார்வேக்கு சென்றுள்ளார் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி.
டெல்லி: கலவர பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிந்துவரும் நிலையில் ராகுல் காந்தி நேற்று நார்வே நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் சார்பில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் பேரணி வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது.

இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று நார்வே நாட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் கூறுகையில் நார்வே வெளியுறவுத் துறையின் அழைப்பின் பேரில் ஆஸ்லோ செல்ல உள்ளேன். ஓரிரு நாள்கள் அங்கு தங்கி, நார்வே அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
On the invitation of the Norwegian Ministry of Foreign Affairs, will be travelling to Oslo for a few days(1/2)
— Office of RG (@OfficeOfRG) August 25, 2017
லாலுவின் பேரணியை புறக்கணிக்கும் நோக்கத்தில்தான் ராகுல் நார்வேக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம், ராம் ரஹிமுக்கு எதிரான கோர்ட் தீர்ப்பையடுத்து ஹரியானா, பஞ்சாப், டெல்லி கலவர பூமியாக பற்றியெறிந்த அதே தினத்தில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் துணை தலைவர் வெளிநாடு கிளம்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்லது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications