மோடியின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது லோக்சபா தேர்தல் முடிவுகள்: காஷ்மீரில் ராகுல் காந்தி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். பரப்புரையின்போது பேசிய அவர், கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் மோடியின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறியுள்ளார்.
பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் பகுதியில், காங்கிரஸ்-தேசிய மாநட்டு கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசியதாவது, "மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுள்ளன. அரசின் மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன. நரேந்திர மோடியை நாங்கள் உளவியல் ரீதியாக அசைத்துவிடோம். அவர் நம்பிக்கை இழந்துவிட்டார் என்பது அவரது முகத்திலேயே வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் முன்பு இருந்தது போல் இல்லை.

எதிர்க்கட்சிகளின் பணிகளை நாங்கள் மிகச்சரியாக செய்து வருகிறோம். மத்திய அரசு மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவரம்போதெல்லாம் நாங்கள் அதற்கு எதிராக நிற்கின்றோம். இதனால் அந்த சட்டத்தை அவர்களால் அமல்படுத்த முடியாமல் போகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இரண்டுமே சாதி, மதத்தின் பெயரால் வெறுப்பை பரப்பி அதன் மூலம் வன்முறையை தூண்டி வருகின்றன. வெறுப்பின் சந்தைகளில் அன்பின் கடைகளை காங்கிரஸ் திறந்து வைத்திருக்கிறது.
இந்தியாவில் ஒரு யூனியன் பிரதேசம் மாநிலமாக மாற்றப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதை பார்த்திருக்கிறீர்களா? அது ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கிறது. இந்த மாநில மக்களின் உரிமை முழுமையாக பறிக்கப்பட்டிருக்கிறது. எனவேதை அது திரும்ப வழங்கப்பட வேண்டும். இதுவே எங்களின் முதன்மையான கோரிக்கையாகும்.
தேர்தலுக்குப் பிறகு அவர்கள் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கத் தவறினால், உங்கள் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதை உறுதிசெய்ய நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்போம்" என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்தும், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக ஆகியவை தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications