குஜராத்தில் அழுத்தமாக கால் பதித்த ராகுல்.. பாஜகவை பயமுறுத்தியது எப்படி?
குஜராத் தேர்தலில் தோற்று இருந்தாலும் இதில் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைய நிறைய விஷயங்கள் நடந்து இருக்கிறது.
Recommended Video

அஹமதாபாத்: குஜராத் தேர்தலில் தோற்று இருந்தாலும் இதில் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைய நிறைய விஷயங்கள் நடந்து இருக்கிறது. மேலும் ராகுலின் சிறப்பான செயல்பாடு பாஜக கட்சிக்கு கொஞ்சம் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.
பாஜக வெல்லும் என உறுதியாக நினைத்த சில தொகுதிகளில் காங்கிரஸ் வென்று இருக்கிறது. மேலும் ராகுல் குஜராத்தில் இருக்கும் சில முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து இருக்கிறார்.
இந்த தேர்தலில் இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலத்தை உண்டாகும். அதேபோல் ராகுல் காந்தியின் தலைமைப்பண்பும் இதன் மூலம் வெளியே வந்து இருக்கிறது.

ராகுல் பக்கம் இருக்கும் மும்மூர்த்திகள்
குஜராத் தேர்தல் தொடங்கியவுடன் முதல் வேலையாக அங்கு இருக்கும் இளம் தலைவர்களை ராகுல் தங்கள் வசம் இழுத்தார். பட்டேல் சமூகத்திற்காக பெரிய போராட்டம் செய்த ஹர்திக் பட்டேலை முதலில் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க கோரினார். ஆனால் அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் பாஜக கட்சிக்கு எதிராக பேசினார். அதேபோல் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸுக்கு ஆதரவானார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் அல்பேஷ் தாக்குர் இருக்கிறார். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தனர்.

மிதமான ஹிந்துத்துவா
ராகுல் இந்த தேர்தலுக்காக ஹிந்துத்துவ அரசியலை பயன்படுத்தக்கூட தயங்கவில்லை. குஜராத்தில் இருக்கும் நிறைய கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். கழுத்தில் புதிதாக வெளியே தெரியும்படி புதிய மாலை அணிந்து இருந்தார். பேச்சுக்கு இடையில் அடிக்கடி இந்துத்துவ கருத்துக்களை வெளிப்படுத்தினார். அதே சமயத்தில் அது அதிகமாகிவிடாதபடி பார்த்துக் கொண்டார்.

இதுதான் குஜராத் மாடலா
ஹிந்துத்துவா குறித்து பேசிய ராகுல் வளர்ச்சி குறித்தும் பேச தவறவில்லை. குஜராத் மாடல் என்று கூறியது என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். பிற்படுத்தப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பு குறைந்தது ஏன் என்று நிறைய கேள்விகள் கேட்டார். மேலும் 5 முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற பாஜக குஜராத்தை அழித்துவிட்டதாகவும் கோபமாக கூறினார். இது பிரச்சாரத்தில் அதிக பலன் அளித்தது.

எல்லாமே இனிதான்
தற்போது ராகுல், காங்கிரஸ் தலைவர் ஆகி உள்ளார். இந்த தேர்தல் கண்டிப்பாக அவருக்கு நல்ல அரசியல் அறிவை வழங்கி இருக்கும். மிக முக்கியமாக பாஜகவின் இரும்பு கோட்டையாக இருந்த குஜராத் இப்போதுதான் கொஞ்சம் ஆட்டம் கண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் எளிதாக வென்ற பாஜக இதில் வெற்றிபெற படாதபாடு பட்டு இருக்கிறது. ராகுலின் அரசியல் பாஜகவின் அந்த சிரமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications