உ.பியைச் சேர்ந்த பிராமணப் பெண்ணை மணக்க ராகுல் திட்டம்- சு. சாமி புது "குண்டு"

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசத் தேர்தலை மனதில் வைத்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த பிராமணப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அத்தேர்தலில் வெற்றி பெற்று அங்கு ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் முயற்சி மேற்கொண்டுள்ளன.

Rahul Gandhi to marry a UP girl?

இந்நிலையில் சர்ச்சைக் கருத்துகளுக்குப் பேர் போன பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் திருமணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், " எனக்குக் கிடைத்துள்ள தகவலின் படி உத்தரப்பிரதேசத் தேர்தலை மனதில் கொண்டு புத்து ( ராகுலை செல்லமாக அப்படித் தான் குறிப்பிடுவார் சாமி), அம்மாநிலத்திலுள்ள பிராமணப் பெண் ஒருவரைத் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

சாமியின் இந்தக் கருத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ளவர்களில் சிலர், ‘ஒருவேளை ராகுலின் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மாநிலத்திற்கு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வாரா?' என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+