அரசியலைவிட்டு ராகுல் ஓடிப் போகவில்லை..திரும்பி வருவார்: திக் விஜய் சிங்
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியலை விட்டு ஓடிப் போகவில்லை. கட்சியை வழிநடத்த அவர் திரும்பி வருவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளிலிருந்து இரு வாரங்கள் விடுப்பில் எடுத்துச் சென்றதாக அண்மையில் காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனால் ராகுல் காந்தி எங்கே என்ற கேள்வி எழுந்தது.

அவர் தாய்லாந்து சென்றுவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் உத்தர்காண்ட்டில் டென்ட் போட்டு ஓய்வு எடுத்து வருவதாகவும் புகைப்படங்கள் வெளியாகின. மேலும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ராகுல் காந்தி 'லீவில்' சென்றது பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது.
இந்நிலையில் ராகுல் காந்தி உத்தர்காண்ட்டில் இருப்பதாக வெளியான செய்திகளை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தி எங்கு இருக்கிறார் என்பது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் தவறு என்றார்.
மேலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ராகுல் காந்தி ஆற்றல் கொண்டவர். அவர் அரசியலை விட்டு எங்கும் ஓடிப் போகவில்லை. கட்சியை வழிநடத்த அவர் திரும்பி வருவார் என்றும் கூறியுள்ளார்.
-
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications