"இந்த" அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது.. சொல்வது ராகுல் காந்தி.. என்ன மேட்டர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது என்றும் இந்த அரசு தானாகவே நிச்சயம் கவிழ்ந்துவிடும் எனவும் தெரிவித்தார். மேலும், பஞ்சாப்பில் உள்ள ஆம் ஆத்மி அரசு டெல்லியில் இருந்து இயக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பஞ்சாப்பில் இப்போது பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அங்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் தேர்தல் பிரச்சாரம் நேற்று தொடங்கப்பட்டது.

Rahul Gandhi Congress Punjab

ராகுல் காந்தி

சங்க்ரூரில் காங்கிரஸ் சார்பில் மிக பெரிய பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பர்கத் சிங், கட்சியின் மாநில பொறுப்பாளர் சச்சின் பைலட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை ராகுல் காந்தி மிக கடுமையாக சாடினார்.

ஓராண்டு கூட நீடிக்காது

இது தொடர்பாக அவர் பேசுகையில், "இன்னும் மூன்று ஆண்டுகளில் பஞ்சாபை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று அமித் ஷா கூறுகிறார். ஆனால், அதற்குள் அவர் உள்துறை அமைச்சராகவே இருக்க மாட்டார்; மோடி தலைமையிலான மத்திய அரசே இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது" என்றார். பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருளை எதிர்ப்போர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சாடினார்,

சமீபத்தில் பஞ்சாபுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2029 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பஞ்சாப் மட்டுமின்றி நாடு முழுவதையும் போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவோம் என்று உறுதியளித்திருந்தார். இதை குறிப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, "போதைப்பொருள் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் எவ்வளவு காலக்கெடு நிர்ணயித்துள்ளனர்? இன்னும் மூன்று ஆண்டுகளா? அதற்குள் அமித் ஷா உள்துறை அமைச்சராகவே இருக்க மாட்டார். என்னுடைய கணிப்பின்படி, இந்த அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது" என்றார்.

ஆம் ஆத்மி மீதும் பாய்ச்சல்

பஞ்சாபில் கலப்பட ஹெராயின் போதைப்பொருள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், இது குறித்து முன்பு எச்சரித்தபோது பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் தங்களது கருத்துகளை புறக்கணித்ததாகவும் அவர் கூறினார். பாஜக மட்டுமின்றி பஞ்சாப்பில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி அரசையும் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார். மாநிலத்தின் நிர்வாகம் டெல்லியில் இருந்து இயக்கப்படுவதாகவும், முதல்வர் பகவந்த் மான் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அமித் ஷாவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து மாநில அரசை கட்டுப்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.

நல்லாட்சி

அவர் மேலும், "பஞ்சாப் மக்களுக்கு தேவைப்படுவது, பஞ்சாபுக்காக பணியாற்றும் அரசு. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பஞ்சாப் அரசு டெல்லியில் இருந்து இயக்கப்படாது. எங்கள் கட்சி பஞ்சாப் அரசை பஞ்சாபில் இருந்தே நடத்தும். எங்கள் முதல்வர் உண்மையிலேயே பஞ்சாபின் முதல்வராக இருப்பார். ஆம் ஆத்மி அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? ஒன்றுமே நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவோம். போதைப்பொருள் இல்லாத பஞ்சாபையும் உருவாக்க காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.

இந்த காங்கிரஸ் பேரணிக்கு முன்னதாக மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்கவுர் சிங், ராகுல் காந்தியை சந்தித்தார். இதை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மூஸ்வாலா தன்னை சந்தித்த பிறகே காங்கிரஸில் இணைந்ததாகவும், மக்களுக்கு சேவையாற்றும் மிக திறமையான இளைஞராக அவர் இருந்ததாகவும் நினைவுகூர்ந்தார். 2022 மே மாதம் பட்டப்பகலில் மூஸ்வாலா கொலை செய்யப்படுவதற்கு முன்பு அரசு அவரது பாதுகாப்பை திரும்ப பெற்றது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+