அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 - தேர்தல் அறிக்கை.. தமிழ்நாட்டை காப்பியடித்த காங்கிரஸ்!
கவுகாத்தி: அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆட்சியில் இருந்து வரும் பாஜக, ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. இந்த நிலையில் அசாமில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தமிழகத்தில் திமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறியது. இதைப்போல் குடும்ப தலைவிகளை குறி வைத்துள்ள காங்கிரசும், அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்படும், அரசு துறைகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்., ஒரு குடும்பத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளம் ரூ.365 ஆக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications