ராகுல் காரை தடுத்து நிறுத்தி அங்கன்வாடி பெண் ஊழியர்கள் போராட்டம்!
அமேதி: ஊதிய உயர்வு கேட்டு 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்ற காரை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து மக்களவைக்கு எம்.பி.,யாக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ராகுல் தனது தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சுற்றுப்பயணத்தின் போது அவரை நேரில் சந்தித்து குறைகளை கூற முடியவில்லை என கோரி அத்தொகுதி மக்கள் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாம் நாளான நேற்று அவர் சென்ற காரை 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் வழிமறித்தனர். தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி அவர்கள் முழக்கமிட்டனர். அவர்கள் ராகுலை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என கூறினர்.
ஆனால் ராகுல் உடன் வந்த போலீஸார் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால், பெண் ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் வேறுவழியில்லாமல் காரை விட்டு இறங்கிய ராகுல் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பெண் ஊழியர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications