அரசியலில் ஒரு விக்ரம்-வேதா.. பிரதமர் மோடிக்கு தினமும் ஒரு நறுக் கேள்வி! ராகுல் காந்தி அதிரடி ஆரம்பம்
Recommended Video

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி தினமும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கேள்வி கேட்க உள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத்தின் தாசா பகுதியில் இன்று ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் இன்றைய கேள்வியை முன் வைத்தார்.
ராகுல் காந்தி கூறுகையில், 1995ம் ஆண்டு குஜராத்தின் மொத்த கடன் தொகை ரூ.9.183 கோடியாக இருந்தது. 2017ல் குஜராத் மொத்த கடன் தொகை ரூ.2,41,000 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

இன்றைய கேள்வி கடன் பற்றியது
அதாவது, ஒவ்வொரு குஜராத் மாநில மக்களின் தலை மீதும் தலா ரூ.37,000 கடன் உள்ளது. தவறான பொருளாதார நிர்வாகத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் குஜராத் மக்கள் எதற்காக துன்பம் அனுபவிக்க வேண்டும்? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

மல்லையா சொகுசு வாழ்க்கை
விவசாயிகள் கடன் அவதியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அதுவும் 20,000 அல்லது 50,000 கடனுக்காக விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஆனால் மல்லையா 9000 கோடி கடன் வைத்துள்ளார். அவர் தற்கொலை செய்யவில்லை. லண்டனில் வாழ்க்கையை எஞ்சாய் செய்கிறார்.

எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது?
2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அதில்ல எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற புள்ளி விவரத்தை வெளியிட வேண்டும். சீனா தினமும் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. ஆனால் மோடி அரசு, ஒரு வருட காலத்தில் கூட இத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

காங்கிரஸ் பொய் வாக்குறுதி தராது
காங்கிரஸ் கட்சி உங்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம் என்று பொய் வாக்குறுதி அளிக்காது. எங்கள் ஆட்சி 10 தொழிலதிபர்களின் கூட்டாட்சியாக இருக்காது. நிலத்தை பறிக்கும் ஆட்சியாக இருக்காது. மக்களின் மனதையறிந்து நடத்தும் ஆட்சியாக இருக்கும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications