தேர்தலில் ஒரு குடும்பத்தில் இருந்து 2 பேருக்குத்தான் போட்டியிட வாய்ப்பு- ராகுல் உத்தரவு!!
டெல்லி: எந்த தேர்தலானாலும் ஒரு குடும்பத்தில் இருந்து 2 பேருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிரடி உத்தரவு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் நான்கைந்து பேர் மட்டுமே அதிகார மையமாக இருந்து வருகின்றனர்.. கட்சி அதிகாரம் பரவலாக்கப்படும்.. அனைத்து நிலைகளுக்குமாக அதிகாரம் விரிவுபடுத்த வேண்டும் என்பது ராகுல் காந்தியின் நிலைப்பாடு.
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் மாநில தேர்தல்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார் ராகுல்.

ஒரு குடும்பத்தில் 2 பேருக்குதான் டிக்கெட்
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவுவிடம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கறாராக சொல்லியிருக்கிறாராம் அவர். இதனால் பல காங்கிரஸ் தலைவர்கள் உறவுகளுக்கு டிக்கெட் வாங்கித்தர முடியாதே என புலம்புகின்றனராம்.

குவியும் பரிந்துரை
காங்கிரஸ் கட்சியின் அதிகார மையம் விரிவுபடுத்தப்படும் என்று ராகுல் கூறிவிட்டதால் தற்போது 5 மாநில தேர்தலுக்கு வட்டாரம், மாவட்ட அளவில் இருந்து யார் யாரை வேட்பாளராக போடலாம் என்று பரிந்துரைகள் குவிந்து வருகிறதாம்.

கடுப்பாகிப் போன அஜித் ஜோகி
ராகுலின் இந்த உத்தரவுக்கு சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மனைவி, மகனுக்கு சீட் வேண்டும்..
தற்போது நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் தமது மகன், மனைவி ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.. தமக்கு எம்.பி.சீட் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அஜித் ஜோகி கூறியுள்ளார்.

சோனியாவிடம் முறையீடு
இது தொடர்பாக சோனியாவிடம் முறையீடு செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications