காவலாளியே திருடன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!
ரபேல் வழக்கு தீர்ப்பில் காவலாளியே திருடன் என உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டதாக பேசிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரபேல் வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்று குறிப்பிட்டுள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக, தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக. எம்பி மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மாதம் 23ந் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ராகுல் காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது ரபேல் வழக்கு உத்தரவு குறித்து குறிப்பிட்டு பேசமாட்டேன் என்று உறுதி கொடுத்தார். ஆனால், இதற்கு வழக்கு தொடர்ந்த மீனாட்சி லேகி எதிர்ப்பு தெரிவித்தார். இது கண்துடைப்பு பதில் என்று வாதிட்டார்.
ராகுல் காந்தியின் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள பதில்கள் திருப்தி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதுதொடர்பாக, அவர் விரிவான விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
கடந்த 30ந் தேதி நடந்த விசாரணையின்போது ராகுல் காந்தி மன்னிப்பு கோருவதற்கான புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக அவரது சார்பில் ஆஜரான அபிஷேக் மானு சிங்வி கூறி இருந்தார். மேலும், ராகுல் காந்தி சார்பில் வருத்தமும் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்தி சார்பில் மூன்றாவது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "மோடியை விமர்சிக்கும்போது ரபேல் வழக்கு தீர்ப்பை தவறுதலாக குறிப்பிட்டு பேசிவிட்டேன்.
இதற்காக, உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்றை மன்னிப்பு கோருகிறேன். எந்த ஒரு உள்நோக்கத்துடனும், திட்டமிட்டு நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு பேசவில்லை. மேலும், உச்சநீதிமன்றத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தன் மீதான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்குமாறும் ராகுல் காந்தி கோரியுள்ளார்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, காவலாளி திருடன் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு, தான் தவறு செய்துவிட்டதாகவும், உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கோர இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம், தான் பேசியதற்காக பிரதமர் மோடியிடமோ அல்லது பாஜக.,விடமோ மன்னிப்பு கோரமாட்டேன். தானும், தனது கட்சியும் பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து செய்வோம்," என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications