மகாராஷ்டிராவிலிருந்து காங்கிரஸை அகற்ற முடியாது: மோடிக்கு ராகுல் பதிலடி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸை அகற்ற முடியாது என அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று தெரிவித்தார். காங்கிரஸ் இல்லாத மகாராஷ்டிராவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறியதற்கு பதிலடியாக ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாசிக் மாவட்டம் திண்டோரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மகாராஷ்டிராவிலிருந்து காங்கிஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், சிவாஜி மஹராஜ், பாபா சாஹிப் அம்பேத்கர் மற்றும் ஜோதிபா புலே ஆகியோரின் எண்ணங்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்துக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி இருக்கும்போது, இங்குள்ள மக்களிடமிருந்து காங்கிரஸ் கட்சியை எப்படி அகற்ற முடியும்?
ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தை இப்போதைய அரசு தொடர்ந்து செயல்படுத்தினாலும், அதில் சில மாறுதல்களை செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது, அவரை சந்தித்த தொழில திபர்கள் குழு, மருந்துகளின் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக மூடிய கதவுகளுக்குள் ஒப்பந்தம் ஏற்பட் டுள்ளது. இதனால், புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்து ரூ.8,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது உங்கள் பாக்கெட்டில் உள்ள பணம் தொழிலதிபர்களின் பாக்கெட்டுக்கு நேரடியாக செல்கிறது.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கை காரணமாக, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications