பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை
டெல்லி: பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் விதிமுறையை மீறி ராகுல் பேசியிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மே 12ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சோலன் நகரில் ராகுல் காந்தி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுதான் தற்போது தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்குக் காரணமாகியுள்ளது.
அவர் பேசுகையில், ஜப்பானைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.. நாங்கள் ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான் பயப்படுகிறோம். நாங்கள் உங்களுக்கு சாலை அமைத்துத் தருகிறோம். உங்களுக்கு உதவுகிறோம். ஆனால் ஆட்சி மாறினால் அமைதி நிலவுமா என்பதில் எங்களுக்கு அச்சம் உள்ளது. இந்திய மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்களோ என்று அஞ்சுகிறோம். இந்த அச்சம் எங்களிடம் அப்பிக் கிடக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் குறைந்தது கொல்லப்படுவார்கள். இந்த அச்சம் மக்களிடையே பரவிக் கிடக்கிறது. இந்த கேள்வி இதற்கு முன்பு எழுந்ததில்லை என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் கூறியது. மேலும் இதுதொடர்பான சிடியையும் அது சமர்ப்பித்திருந்தது.
இதையடுத்து ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications