சினிமாவை மிஞ்சும் பதற்றம்.. தாக்கிய பாஜகவினர் - எங்க எம்எல்ஏவை காணோம்! பகீர் கிளப்பிய ராகுல் காந்தி
காந்திநகர்: குஜராத்தில் பாஜகவினரால் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ, கண்டிபாய் கராதியை காணவில்லை என காங்கிரஸ் எம்.பியும் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இன்று 2வது கட்ட சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து வெளியாகி இருக்கும் தகவல் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. கண்டி கராதியை பாஜகவினர் கொடூரமாக தாக்கிய கொலை செய்ய விரட்டிய நிலையில் அவர் மாயமாகிவிட்டதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ராகுல் காந்தி
இந்த நிலை இன்று அதிகாலை ட்விட்டரில் கருத்திட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சியின் பழங்குடியினர் தலைவரும் டண்டா தொகுதி வேட்பாளருமான கண்டிபாய் கராதி பாஜக குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவரை காணவில்லை." என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

கண்டிபாய் கராதி
குஜராத்தின் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த கண்டிபாய் கராதி வடக்கு பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள டண்டா தனித் தொகுதியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறது. இவர் மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் லது பார்கி போட்டியிடுகிறார்.

தாக்குதல் புகார்
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் தன்னை தாக்கியதாக கண்டி கராதி தெரிவித்து உள்ளார். "வாக்காளர்களை சந்திப்பதற்காக நான் சென்றுகொண்டு இருந்தபோது பாஜக வேட்பாளர் லது பார்கி, எல்.கே. பராத் மற்றும் அவரது சகோதரர் வதான் ஜியுடன் அங்கே வந்தனர். அவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு வந்து என்னை கொடூரமாக தாக்கினர்.

கொடூர தாக்குதல்
எங்கள் வாகனங்கள் பமோதரா 4 வழிச்சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது பாஜக வேட்பாளர் லது பார்கி தனது அடியாட்களுடன் வந்து வாகனங்களை வழி மறித்தார். பிரச்சனை ஏதும் வேண்டாம் என்று நினைத்து நாங்கள் திரும்பிச் செல்ல முயற்சித்தோம். அப்போது பாஜக வேட்பாளரின் ஆட்கள் எங்களை சுற்றி வளைத்தனர்.

காரில் விரட்டிய பாஜகவினர்
அவர்கள் எங்கள் மீது கும்பலாக கொடூர தாக்குதலை நிகழ்த்தினர். தேர்தல் நடைபெறும் எனது பகுதிக்கே நான் சென்றென். அங்கு நிலைமை சரியில்லாததை உணர்ந்து அங்கிருந்து நான் தப்பித்து செல்ல முயன்றேன். இதன் காரணமாக எனது காரை எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டேன். அப்போது பாஜகவினரின் சில கார்கள் எனது காரை விரட்டி வந்தன.

காட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ
என்னை விரட்டி வந்த பாஜக வேட்பாளர் லது பார்கி 2 நபர்களுடன் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வாள்களுடன் எங்களை கொலை செய்ய முயன்றார். எனவே நான் அங்கிருந்தும் தப்பித்து செல்ல முயன்று, 10 முதல் 15 கிலோ தூரம் வரை ஓடினோம். 2 மணி நேரம் அவர்கள் எங்களை விரட்டி வந்தார்கள். தற்போது காட்டிற்குள் உள்ளோம்.

தேர்தல் ஆணையம்
எனக்கு பாஜகவினரால் அச்சுறுத்தல் உள்ளது என தேர்தல் ஆணையத்துக்கு 4 நாட்களுக்கு முன்பாக நான் கடிதம் எழுதினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் அப்போதே உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இது நடந்து இருக்காது. நா இப்பகுதியில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று பாஜக வேட்பாளர் ஏற்கனவே மிரட்டினர்." என்று தெரிவித்து இருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications