இழுபறி முடிந்தது.. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு.. துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்!
ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்று இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்க உள்ளார்.
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஜெய்ப்பூரில் கொண்டாடி வருகிறார்கள். ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கடந்த இரண்டு நாட்களாக ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பாக யார் முதல்வராக தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்று பெரிய கேள்வி இருந்தது. அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றும் கூட அதை கொண்டாட முடியாத நிலையில் நீடித்தது.
நேற்றுதான் பெரிய இழுபறிக்கு பின் மத்திய பிரதேச முதல்வர் தேர்வு செய்யப்பட்டார். மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.

பெரும் வெற்றி
ராஜஸ்தானில் ஆட்சி புரிந்த வசுந்தரா ராஜேவின் பாஜக பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில் 99 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களே தேவை.இங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

பெரிய போட்டி
ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இளம் புயல் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்தது. இருவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவும் சமமாக இருந்தது.

தீர்மானம் நிறைவேற்றம்
இதற்காக ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சமமாக சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாடிற்கு ஆதரவு அளித்தனர். கடைசியில் முதல்வரை ராகுல் காந்திதான் தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவாதம் செய்தார்
இதையடுத்து நேற்றே ராஜஸ்தான் முதல்வரை ராகுல் அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே நேற்று கடும் போட்டி நிலவியது. இருவரையும் ராகுல் காந்தி நேரில் அழைத்து பேசினார். அதன்பின் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார்.

இன்று முடிவு
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வதில் 2 நாட்களாக இழுபறி நீடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அசோக் கெலாடிற்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

14வது முதல்வர்
அசோக் கெலாட் ராஜஸ்தானின் 14வது முதல்வர் ஆவார். இவர் ஏற்கனவே இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார். இவர் 1998 முதல் 2003 மற்றும் 2008 முதல் 2013 என்று இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார்.
|
துணை முதல்வர்
அதேபோல் ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் தொடர்வார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற சச்சின் பைலட் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications