இன்னமும் 'அரசியலுக்கு' திரும்பாத ராகுல் காந்தி- லீவு நீட்டிப்பு!!
டெல்லி: நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது லீவை மேலும் நீட்டித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார், எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகாததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பியதாகவும், அதற்கு சோனியா தடை விதித்ததாலேயே அவர் கோபித்துக் கொண்டதாகவும் தகவல் பரவியது.

மேலும் காங்கிரஸ் கட்சியினரே, ராகுல் காந்தி பற்றிய பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியதால் சர்ச்சை தீவிரமானது.
புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்காக, சில ஆழ்மனப்பயிற்சிகளை கற்றுக்கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளார் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனாலும் ராகுல் காந்தியிடம் இருந்தும் எந்தவித பதிலும் வரவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் டெல்லி திரும்பியது குறித்து எந்தவித தகவலும் இல்லை.
இதனிடையே ராகுல் காந்தி, தனது லீவை நீட்டித்து உள்ளதாகவும், இந்த வார இறுதியில் அவர் டெல்லி திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications