107 வயது பாட்டிக்கு ராகுலை பிடிக்குமாம்.. போன் செய்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 107 பாட்டி ஒருவருக்கு சர்ப்ரைசாக போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 107 பாட்டி ஒருவருக்கு சர்ப்ரைசாக போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அந்த பாட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் போன் செய்து உள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் அவர் அந்த பாட்டிக்கு டிவிட்டரில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தற்போது அந்த பாட்டியின் பேத்தி இதற்கு நன்றி தெரிவித்து டிவிட் செய்து உள்ளார்.
இந்த டிவிட்டர் விவாதம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. ராகுலின் பண்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ராகுல் இரண்டாவது இன்னிங்ஸ்
காங்கிரஸ் கட்சியின் தலைவராகி அறிவிக்கப்பட்டதில் இருந்து ராகுல் அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விட்டார் என்று கூறலாம். அதற்கு முன்பே டிவிட்டரில் அவர் பல மக்களை கவர்ந்துவிட்டார். அவர் போடும் டிவிட்டுக்ள எல்லாம் வைரல் ஆகி வருகிறது. சில நாட்களுக்கு முன் தற்காப்பு கலை ஒன்றை கற்றுக் கொள்வது போல அவர் புகைப்படம் வெளியிட்டார்.
|
பாட்டிக்கு பிடிக்கும்
இதனால் இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் ''இன்று என் பாட்டிக்கு பிறந்த நாள். அவருக்கு 107 வயது ஆகிறது. அவருடைய ஒரே ஆசை ராகுல் காந்தியை பார்க்க வேண்டும் என்பது மட்டும் தான். ஏன் என்று கேட்டதற்கு, அவர் மிகவும் அழகாக இருக்கிறார்'' என்று கூறினார் என தீபாளி சிகாந்த் என்ற பெண் டிவிட் செய்து இருக்கிறார்.
|
வாழ்த்து தெரிவித்த ராகுல்
இதற்கு பதில் அளித்த ராகுல் ''அன்புள்ள தீபாளி, உங்கள் அழகான பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினேன் என்று சொல்லிவிடுங்கள். மேலும் அவருக்கு என் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் கூறி விடுங்கள். மேலும் அவரை என் சார்பில் கட்டியணைக்கவும்.'' என்றும் குறிப்பிட்டார்.
|
போன் செய்தார்
இந்த டிவிட்டிற்கு பின் தீபாளி புதிய டிவிட் ஒன்று செய்து இருக்கிறார். அதில் ''டிவிட்டரில் வாழ்த்து சொன்னது போதவில்லை போல. ராகுல் காந்தி போன் செய்து என் பாட்டியை வாழ்த்தி இருக்கிறார். இதுதான் உண்மையான மனித பண்பு. உங்கள் எல்லோருடைய வாழ்த்திற்கும் நன்றி. எல்லோரும் முக்கியம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications