தேதி இதுதான்! ராமர் கோவிலுக்கு ராகுல் செல்வாரா? அமித்ஷா சொன்ன அந்த வார்த்தை! திரும்பும் காங்கிரஸ்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்து முடிந்துள்ள முதற்கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது. அதோடு பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆரூடம் தெரிவித்தார். அதோடு ராமர் கோவில் குறித்து பேசிய அமித்ஷா ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளதால் 2 கட்டங்களாக அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக வரும் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
சத்தீஸ்கரை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடியாக போட்டி உள்ளது. தற்போது இருகட்சிகளின் தலைவர்களும் 2ம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர், குன்குரி மற்றுமு் சந்திராபூர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். மேலும் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் என்பது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளதை காட்டுகிறது. அதேபோல் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்பதற்கான சமிக்ஞைகளை முதற்கட்ட தேர்தல் வழங்கி உள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இது ஜூடியோ ஜியின் நிலம் என்பதையும், பழங்குடியினரை மதமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்பதையும் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளாக ராமர் கோவில் கட்டுவதாக தடையாக இருந்து வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி கட்டி முடித்துள்ளார்.
இந்த ராமர் கோவில் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேக தேதியை நாங்கள் கூறவில்லை என ராகுல் எங்களை கேலி செய்தார். தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் ராமர் கோவிலுக்கு செல்லமாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இங்குள்ள மக்கள் நிச்சயமாக செல்வார்கள்’’ என்றார்.
முன்னதாக பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் மாநிலத்தில் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அயோத்தி யாத்திரைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications