மிஸ்டர் மோடி.. ரூ15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? விலைவாசி குறைப்பு எங்கே? பீகாரில் 'பொங்கிய' ராகுல்
பாட்னா: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை குறைப்போம்; ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் செலுத்துவோம் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நவம்பர் 5-ந் தேதிவரை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, அவாமி மோர்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரு அணிகளுமே தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
பீகாரின் மேற்கு சம்புரான் மாவட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் பங்கேற்கவில்லை.
நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளாவிட்டாலும் தன்னந்தனியாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
பீகாரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மோடியின் நண்பர்களாண கோட்-சூட் முதலாளிகளிடம் இருந்து மாநிலத்தைக் காப்பாற்றுவோம். இங்கே வேலைவாய்ப்புகளைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Congress VP Rahul Gandhi addresses a rally in West Champaran, Bihar. (ANI) pic.twitter.com/jtglirXXxt
— Times of India (@timesofindia) September 19, 2015 டீ விற்றுக் கொண்டிருந்த மோடி இன்று கோட்-சூட் போட்ட மனிதர்களை மட்டுமே சந்திக்கின்றார். இது ஏழைக்களுக்கான அரசு கிடையாது. கோட் சூட் அணிந்த பணக்காரர்களுக்கான ஆட்சி நடந்து வருகின்றது.
பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் வரும் என்ற உத்திரவாதம் கொடுத்தது என்னானது? விலைவாசியைக் குறைப்போம் என்ற முழக்கம் என்ன ஆனது?
ஆட்சிக்கு வந்ததுமே குர்தா உடையில் இருந்து 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடைக்கு மாறிவிட்டார் மோடி.
இவ்வாறு ராகுல் சாடினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications