ராகுல்காந்தி இந்த கட்டிப்பிடி டெக்னிக்கை அவருக்கிட்ட கத்துக்கிட்டாரோ?
ராகுல்காந்தி கட்டிப்பிடி டெக்னிக்கை நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து கற்றிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லி: ராகுல்காந்தி கட்டிப்பிடி டெக்னிக்கை நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து கற்றிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனல் பறக்க ஆவேசமாக உரையாற்றினார்.
பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் மீதும் அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறினார் ராகுல். இதனால் லோக்சபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.

திடுக்கிட்ட மோடி
இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராதவிதமாக பிரதமரின் இருக்கை நோக்கி சென்ற ராகுல்காந்தி அவரை சட்டென கட்டிப்பிடித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி திடுக்கிட்டார்.

தட்டிக்கொடுத்த மோடி
பின்னர் ராகுல் காந்தியை அழைத்து ஏதோ கூறி முதுகில் தட்டிக்கொடுத்தார் பிரதமர் மோடி. இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

கட்டிப்பிடி டெக்னிக்
இந்நிலையில் ராகுல்காந்தி இந்த கட்டிப்பிடி டெக்னிக்கை நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து கற்றிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை நடிகர் கமல்ஹாசன் இரண்டு முறை ராகுல்காந்தியை சந்தித்துள்ளார்.

டெல்லியில் சந்திப்பு
ஒருமுறை பெங்களூரில், கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் இருவரும் சந்தித்துள்ளனர். மற்றொரு முறை டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்
வழக்கமாக சந்திப்பவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பது நடிகர் கமலின் ஸ்டைல். தனது வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்திலும் கட்டிப்பிடி வைத்தியத்தின் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துக்கூறியிருப்பார் நடிகர் கமல்.

கமலிடம் கற்றிருப்பாரோ?
இந்நிலையில் கமலுடனான சந்திப்புக்கு பிறகு ராகுல் காந்தி பிரதமரை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் இந்த கட்டிப்பிடி டெக்னிக்கை ராகுல்காந்தி கமலிடம் இருந்து கற்றிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications