For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யோகேந்திர யாதவின் நண்பர்களின் மருத்துவமனையில் ஐ.டி ரெய்டு.. ரூ.27 லட்சம் பறிமுதல்!

சுவராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் யோகேந்திர யாதவின் நண்பர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை மூலம், இதுவரை ரூபாய் 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    யோகேந்திர யாதவின் நண்பர்களின் மருத்துவமனையில் ஐ.டி ரெய்டு.

    ஹரியானா: சுவராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் யோகேந்திர யாதவின் நண்பர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை மூலம், இதுவரை ரூபாய் 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது இருக்கும் பாஜக ஆட்சிக்கும், முன்னாள் காங்கிரஸ் ஆட்சிக்கும் எதிராக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருபவர் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மீ கட்சியை தொடங்கியவர்களின் ஐவரும் ஒருவர். தற்போது இவர் அந்த கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு, சுவராஜ் இந்தியா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

    Raid in Yogendra Yadavs relatives places: IT department seized Rs 27 lakh

    இந்தநிலையில் இவருக்கு நெருக்கமான சில இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஹரியானாவில் உள்ள ரேவாரி பகுதியின் இரண்டு தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

    இந்த வரி சோதனை மூலம், இதுவரை ரூபாய் 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு நிதி முறைகேடு மூலம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்போது விசாரணை நடக்கிறது.

    மேலும் இவர்கள் நிலம் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளனர். அங்கு கிடைத்த ஆவணங்களின் படி, வைரம் வாங்கியதில் 29 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதில் யோகேந்திர யாதவின் உறவினருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த யோகேந்திர யாதவ் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல் என்று கூறினார். எந்த விதமான முறைகேடும் நடக்கவில்லை என்பது விசாரணையின் முடிவில் தெரியும் என்றுள்ளார்.

    English summary
    Raid in Yogendra Yadav's relative's places: IT department seized Rs 27 lakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X