ரயில்வே பட்ஜெட் எப்படி?: பாஜக - 'சூப்பர்', காங்கிரஸ் - 'ரொம்ப சுமார்'
டெல்லி: ரயில்வே பட்ஜெட் புரட்சிகரமானது என்கிறது பாஜக. ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தவே பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என பார்ப்போம்.

மோடி
ரயில்வே பட்ஜெட் எதிர்காலத்தையும், பயணிகளையும் கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக ரயில்வே துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கிரண் கேர்
புத்திசாலித்தனமான பட்ஜெட். ரயில்வேத் துறை நவீனமயமாக்கப்பட உள்ளது நல்லது என்று நடிகையும், பாஜக எம்.பி.யுமான கிரண் கேர் தெரிவித்துள்ளார்.

தினேஷ் திரிவேதி
முன்னாள் ரயில்வே அமைச்சரான திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி கூறுகையில், பட்ஜெட்டை படிக்காமலேயே இது பட்ஜெட் அல்ல வெறும் ஐடியா தான் என்று கூற முடியும். ரயில்வே பட்ஜெட்டில் வெறும் வாக்குறுதிகள் மட்டுமே உள்ளது என்றார்.

பிரகாஷ் ஜாவதேகர்
இது புரட்சிகரமான பட்ஜெட். ரயில்வே குறித்த மோடியின் கனவை செயல்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவதேகர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்
புதுமையை புகுத்தும் சுரேஷ் பிரபுவின் சிந்தனையை மதிக்கிறேன். இது சராசரிக்கும் குறைவான பட்ஜெட். ரயில்வே துறையை நவீனமயமாக்க அதிக முதலீடு தேவை. அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று பிரபு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் சுக்லா
புதிய ரயில்கள் குறித்து ஒரு அறிவிப்பு கூட இல்லை. பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications