ரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு கிடைத்ததும், கிடைக்காததும்
சென்னை: 2014ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான ரயில்களே அறிவிக்கப்பட்டுள்ளன.
2014ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் 58 புதிய ரயில்களை அறிவித்தார்.
அதில் தமிழகத்திற்கு வெறும் 6 ரயில்கள் தான் அறிவிக்கப்பட்டன. ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கிடைத்தது, கிடைக்காதது பற்றி பார்ப்போம்.

6 ரயில்கள்
ஷாலிமார்-சென்னை ஏ.சி. எக்ஸ்பிரஸ், ஜெய்பூர்-மதுரை ஏ.சி. எக்ஸ்பிரஸ், கான்பூர்- நாக்பூர்- மைசூர்- பெங்களூர்- சென்னை இடையே அதிவேக ரயில், சென்னை- விசாகப்பட்டினம் இடையே வாராந்திர புதிய ரயில், அகமதாபாத்-சென்னை இடையே வாரம் இருமுறை செல்லும் ரயில், யஷ்வந்த்பூர்-ஓசூர் இடையே வாரம் 6 நாட்கள் செல்லும் ரயில் ஆகிய 6 ரயில்கள் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

இல்லையே
ஜன சாதரன், பயணிகள் ரயில், சேவை நீட்டிப்பு செய்யப்படும் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இல்லை.

அதிவேக ரயில்
ரயில்களின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டரில் இருந்து 200 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும் 9 வழித்தடங்களில் மைசூர்-பெங்களூரு-சென்னை, சென்னை-ஹைதராபாத் வழித்தடங்கள் அடக்கம்.

27 எக்ஸ்பிரஸ்
ரயில்வே பட்ஜெட்டில் 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதில் அமதாபாத்-சென்னை வாரம் இருமுறை, விசாகப்பட்டினம்-சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் என்று வெறும் 2 ரயில்கள் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த நிதியாண்டு
இந்த நிதியாண்டில் தமிழகத்திற்கு பெயருக்கு 6 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த நிதியாண்டிலோ தமிழகத்திற்கு 14 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.சி. எக்ஸ்பிரஸ்
5 ஏசி எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று கூட தமிழகத்தில் இருந்து கிளம்புவதாகவோ அல்லது தமிழகம் வழியாக செல்லும் வகையிலோ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஓசூர்
அறிவிக்கப்பட்ட 5 டிஇஎம்யூ அதாவது டீசல் என்ஜின் மல்டிபிள் யூனிட் ரயில்களில் யஷ்வந்த்பூர்-ஓசூர் இடையேயான வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் ஒரேயொரு ரயில் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications