நிச்சயம் நடந்த அன்றே ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் மீது பலாத்கார வழக்கு
பெங்களூர்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்தா கவுடாவின் மகன் மீது நடிகை ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக். அவருக்கு கொடகு பகுதியில் உள்ள குஷால் நகரில் புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நான் தான் கார்த்திக்கின் மனைவி என்று மாடலும், நடிகையுமான மைத்ரியா கவுடா என்பவர் தெரிவித்தார்.
கார்த்திக் தன்னை கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ரகசியமாக மங்களூரில் வைத்து கார் டிரைவர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காத்திரு
தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கும் வரை இந்த திருமணம் குறித்து யாரிடமும் கூறாமல் காத்திருக்குமாறு கார்த்திக் கூறியதாக மைத்ரியா கவுடா தெரிவித்தார்.

புகார்
கார்த்திக்கின் நிச்சயதார்த்தம் நடந்த இரவு மைத்ரியா பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கார்த்திக்
என் அப்பாவின் பெயரைக் கெடுக்கவே அவர் இப்படி புகார் கொடுத்துள்ளார் என்று சதானந்த கவுடாவின் மகன் தெரிவித்துள்ளார்.

சதானந்த கவுடா
அந்த பெண்ணின் புகாரை பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். என் வாழ்க்கை ஒரு திறந்து புத்தகம் என்பது அனைவருக்கும் தெரியும். என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் முடிந்த கையோடு ஒரு பெண் புகார் தெரிவித்தால் அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications