தனியார் மூலம் ரயில் டிக்கெட் விற்க திட்டம்: யூனியன்கள் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில் டிக்கெட் விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ரயில்வே பட்ஜெட் அறிவிப்பின் படி, உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு பணிகளை தனியார் மயமாக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, 50 பெரிய ரயில் நிலையங்களில் துப்புரவு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

இதே போல் டிராக்மென், ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளில் கேட்கீப்பர்கள் போன்ற பணிகளையும் தனியாரிடம் விட முடிவு செய்துள்ளது.

Railways invites private players to sell tickets

இந்நிலையில், அடுத்தகட்டமாக டிக்கெட் முன்பதிவு மற்றும் உடனடி டிக்கெட் விற்பனை என இரண்டையுமே தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

அதிக டிக்கெட் விற்பனை மையங்கள்...

தற்போது இ-டிக்கெட் விற்பனைக்கு மட்டும் டிராவல் ஏஜெண்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முன்பதிவு மற்றும் உடனடி டிக்கெட் விற்பனை இரண்டையும் தனியார் வசம் ஒப்படைப்பதன் மூலம் டிக்கெட் விற்பனை மையங்களை அதிகரிக்க முடியும் என ரயில்வே கருதுகிறதாம்.

கூட்டம் குறையும்...

இதனால், தற்போது ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நிற்கும் கூட்டத்தின் அளவு குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அனுபவம் தேவை...

5 ஆண்டு டிக்கெட் விற்பனையில் அனுபவம் உள்ள தனியார் ஏஜெண்டுகள், இந்த கூடுதல் டிக்கெட் விற்பனை மையங்கள் அமைக்க தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். இவர்கள் ரயில் நிலையங்களுக்கு வெளியே தங்களது டிக்கெட் விற்பனை மையங்களை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

எதிர்ப்பு...

ஆனால், ரயில்வேயின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மொத்த ரயில்வேயுமே தனியார் வசமாகி விடும் என அவர்கள் காரணம் கூறுகிறார்கள்.

கெட்டப் பெயர்...

மேலும், ஏற்கனவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட இ-டிக்கெட் விற்பனை உள்ளிட்ட பணிகளில் மக்களிடமிருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் கூடுதல் டிக்கெட் விற்பனை மையங்கள் அமைக்க அனுமதி அளித்தால், ரயில்வேக்குத் தான் கெட்டப் பெயர் வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+