பெங்களூர் வெள்ளம்: தீவுபோல மாறிய வீடுகள்.. படகில் சென்று உணவு வழங்கிய தீயணைப்பு படையினர்
பெங்களூர்: கடந்த ஒரு வாரமாக, பெங்களூரில் தினமும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு, விடிய, விடிய மழை பெய்தது.
சுமார் 4 செ.மீ அளவுக்குதான் மழை பெய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், விடாமல் பெய்து கொண்டிருந்தது. இதனால் நகரிலுள்ள பல ஏரிகளில் இருந்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஊருக்குள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.
மழை இன்னும் 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

பொம்மனஹள்ளி மண்டலம்
பொம்மனஹள்ளி மண்டலத்தில்தான் வெள்ளத்தால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. கோடிச்சிக்கனஹள்ளி, பிலேகஹள்ளி ஆகிய பகுதிகள் முழுமையாகவும், ஒங்கசந்திரா ஏரியாவில் ஓரளவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

படகுமூலம் வினியோகம்
மேற்கண்ட பகுதிகளில் தரைத்தளத்தில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்துவிட்டதால் மாடிகளுக்கு அவர்களை ஷிப்ட் செய்தனர் தீயணைப்பு அதிகாரிகள். சாப்பாடு இன்றி தவித்தவர்களுக்கு படகு மூலம் சாப்பாடு வினியோகம் செய்தனர்.

பல துறையினர்
150க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் அவசர பிரிவு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாநகராட்சி, மின்துறை ஊழியர்களும் கை கோர்த்துள்ளனர்.

மீட்பு பணிகள்
வெள்ள நீரை வெளியேற்ற ராட்சத பம்புகள் கொண்டுவரப்பட்டு நீர் அகற்றப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடைபெறும் மீட்பு பணிகளை தொகுதி எம்.எல்.ஏக்களும், கவுன்சிலர்களும் மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications