Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்தார் ராஜபக்சே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று காலை டெல்லி வந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதையடுத்து நரேந்திர மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Rajapaksa lands in Delhi

மோடியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவுக்கு வருவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்தார். இதற்கிடையே இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் ராஜபக்சே வருகையை கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சே இன்று காலை டெல்லி வந்தார். மிக பலத்த பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

Sri Lankan President Mahinda Rajapaksa has arrived in India for @narendramodi's swearing in. #ModiCabinet pic.twitter.com/ejqv7ZYDsz
— CNN-IBN News (@ibnlive) May 26, 2014

கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்த ராஜபக்சேவுடன், அமைச்சர்கள் ஜி.எல்.பெரீஸ், ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரும் வந்துள்ளனர்.

அவரது வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+